பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 917

அறுசீர் ஆசிரியவிருத்தம்
 

9184.

தூக்கிய தூணி வாங்கி, தோளொடு மார்பைச் சுற்றி
வீக்கிய கவச பாசம் ஒழித்து, அது விரைவின் நீக்கி,
தாக்கிய பகழிக் கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றிப்
போக்கினன்-தழுவிப் பல்கால், பொன் தடந் தோளின் ஒற்றி.

 

தூக்கிய தூணி வாங்கி - இலக்குவன்  தோளில் தொங்கவிட்டிருந்த
அம்பறாத்தூணியைக்  கழற்றி   விட்டு; தோளொடு  மார்பைச்  சுற்றி
வீக்கிய  கவசபாசம்  ஒழித்து
- தோளோடு சேர்த்து மார்பைச் சுற்றிக்
கட்டியிருந்த கவசத்தின் கயிற்றை அவிழ்த்து;  அது விரைவின் நீக்கி -
அக்கவசத்தை  விரைவாக  நீக்கிவிட்டு; தாக்கிய  பகழிக்  கூர்வாய்த்
தடித்தபுண்  தழும்பும்  இன்றி
, - (பகைவன்) தாக்கிய அம்பின் கூரிய
வாய்  வெட்டிய  புண்ணின்  சுவடும்  இல்லாதபடி; பல்கால்  தழுவிப்
பொன் தடந்  தோளின் ஒற்றிப் போக்கினன்
- பலமுறை தழுவியும்
அழகிய பெரிய தோளினால் ஒற்றியும் போக்கினான்.
 

                                                (69)
 

               வீடணனை இராமன் புகழ்ந்து பேசி இனிது இருத்தல்
 

9185.

‘ஆடவர் திலக! நின்னால் அன்று; இகல் அனுமன் என்னும்
சேடனால் அன்று; வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று;
வீடணன் தந்த வென்றி, ஈது’ என விளம்பி மெய்ம்மை,
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன், இனிதின்,
                                         இப்பால்.

 

ஏடு  அவி்ழ் அலங்கல் மார்பன் - இதழ்கள் விரியப் பெற்ற மலர்
மாலை  அணிந்த   மார்பினை  உடைய   இராமன்; ’ஆடவர்  திலக!
நின்னால் அன்று!  இகல்  அனுமன்  என்னும் சேடனால் அன்று
-
(இலக்குவனை   நோக்கி)   ‘ஆடவர்களிற்    சிறந்தவனே! (இவ்வெற்றி)
நின்னால் உண்டானது அன்று! அனுமன் என்கின்ற