வல்லமைமிகக் உயர்ந்த பண்பினனாலும் அன்று; வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று - வேறோர் தெய்வத்தின் சிறப்பினாலும் அன்று; வீடணன் தந்த வென்றி ஈது என மெய்ம்மை விளம்பி இப்பால் இனிதின் இருந்தனன் - ‘வீடணன் தந்த வென்றி’ என மெய்யான காரணத்தைக் கூறிப் பாராட்டிவிட்டு இங்கு இனிதாக இருந்தான். |