உடன் பொருவான் - பக்கத்தில் துணையாக உறவினர்களாய்ச் சேர்ந்து வந்தவர்களுடன் போரிடுவதற்கு; அமைவான் - சம்மதிப்பான். |
பொருவான் - போர் புரிவதற்கு, அமைவான் - சம்மதிப்பான். |
(52) |
இராமன் இலக்குவனை அனுப்பல் |
| 7779. | ‘எழுவாய், இனி என்னுடன்’ என்று, எரியும் மழு வாய் நிகர் வெஞ் சொல் வழங்குதலும், தழுவா, ‘உடன் ஏகுதி; தாழல்!’ எனத் தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும். |
இனி என்னுடன் எழுவாய் என்று - இப்போது என்னுடன் (வருவதற்கு) எழுவாய் என்று; எரியும் மழுவாய் நிகர் வெஞ்சொல் வழங்குதலும் - எரிகின்ற மழுவின் வாயை ஒத்த கொடுமையான சொல்லை (மயிடன்) சொல்லுதலும்; தொழுவார் தொழு தாள் அரி - தொழுபவர்கள் தொழத்தக்க திருப்பாதங்களையுடைய திருமாலின் அவதாரமாகிய இராமபிரான்; தழுவா - (இலக்குவனைத்) தழுவிக்கொண்டு; உடன் ஏகுதி தாழல் எனச் சொல்லுதலும் - உடனே போ, கால தாமதம் செய்யற்க என்று சொன்னபோது. |
வாய் - நுனி, தாழல் - காலதாமதம் செய்யற்க, அரி - திருமாலவதாரமாகிய இராமன். தழுவா - செய்யா எனும் வாய்பாட்டு உடன் வினையெச்சம். |
(53) |
வீடணன் அதிகாயனது திறம் குறித்தல் |
| 7780. | ‘எல்லாம் உடன் எய்திய பின், இவனே வில்லானொடு போர் செய வேண்டும்’ எனா, நல்லாறுடை வீடணன், நாரணன்முன் சொல்லாடினன்; அன்னவை சொல்லுதுமால். |
நல்லாறுடை வீடணன் - நல்லற வழியில் செல்லும் தன்மையுள்ள வீடணன்; எல்லாம் உடன் எய்திய பின் - நாம் எல்லாம் (இலக்குவனுக்குத்) துணையாக உடன் போய்ப் (போர்க்களம்) சேர்ந்த பின்; இவனே வில்லானொடு போர் செய வேண்டும் எனா |