811. | ‘தாருகன் எனும் படைத் தலைவன் தன் வயப் போர் அழிந்தவன் உயிர் பொன்றினான்’ என, கார் நிற அரக்கர்கள் கனலின் பொங்கியே, வீரனை வளைத்தனர், வெகுளி மிக்குளார். | (122-1) | 812. | மழை உற்றன முகில் ஒப்பன செவி மும் மத வழியே விழ உற்றன, வெறி வெங் கணை நிமிரப் பொறி சிதற, முழை உற்றன முகில் சிந்தின முன்பு ஏறில முடிய, உழை உற்றன உலவும்படி உலவுற்றன-கரிகள். | (140-1) | 813. | துள்ளிக் களி வய வானரர் ஆர்த்தார்; அவை தோன்றக் கள்ளக் கடு நிருதக் குலம் கண்டப்படக் கண்டே, உள்ளக் கடு வேகத்தொடு தேவாந்தகன், உளத்தே கொள்ளைப் படை அனையஃது ஒரு கொடுஞ் சூலம் கைக் கொண்டான். | (169-1) | 814.
| ஆங்கு அது நிகழக் கண்ட அடல் அதிகாயன் சீறி, தாங்கு பல் அண்ட கோடிதான் பிளந்து உடைய, தன் கை வாங்கினன் சிலை; நாண் ஓசை படைத்தபின், வாளி மாரி பாங்குறு கவியின் சேனைக் கடல்மிசைப் பரப்பி ஆர்த்தான். | (186-1) | 815. | ஆர்த்து அரும் பகழி மாரி ஆயிர கோடி மேலும் தூர்த்து, அடல் கவியின் சேனை துகள் படத் துணிந்து சிந்தப் பேர்த்தனன் சிலை நாண் ஓதை; பிறை முகப் பகழி பின்னும் கோத்தனன், அனந்த கோடி கோடியின்-கொதித்து வெய்யோன். | (186-2) |
|
|
|