816. | உருத்து, அதிகாயன், மேன்மேல் ஒண் சுடர்ப் பகழி மாரி நிரைத்தலின், இடைவிடாது நெடுங் கவிச் சேனை வெள்ளம் தரைத் தலம்அதனில் பட்டுத் தலை உடல் சிதற, சோரி இரைத்து எழு கடலின் பொங்க, இமையவர் அலக்கணுற்றார். | (186-3) | 817. | கரடியின் சேனையோடு கவிக் குலத் தானை எல்லாம் தரைப் பட, சரத்தின் மாரித் தசமுகன் சிறுவன்-சீறா, கரை அறு கவியின் சேனைத் தலைவர்கள் கனலின் பொங்கி, வரையொடு மரமும் கல்லும் வாங்கினர், விரைவின் வந்தார். | (186-4) | 818. | வானரத் தலைவர் பொங்கி வருதலும், அரக்கன் மைந்தன், போன திக்கு அறிவுறாமல், பொழிந்திடும் பகழிதன்னால் ஆனவர் உடலம் முற்றும் அழித்தனன்; குருதி பொங்க, தான் அறிவு அழிந்து, யாரும் தனித் தனி தலத்தின வீழ்ந்தார். | (186-5) | 819. | திசை முகம் கிழிய, தேவர் சிரம் பொதிர் எறிய, திண் தோள் தசமுகன் சிறுவன், பின்னும், தடஞ் சிலை குழைய வாங்கி, விசை கொள் நாண் எறிந்து, மேன்மேல் வெங் கவித் தானை வெள்ளம் பசை அறப் புலர்ந்து போகப் பொழிந்தனன், பகழி மாரி. | (186-6) |
|
|
|