| கல் இடும் மாரி என்னக் கணை மழை பொழியக் கண்ட வில்லியும், விடாது, வெய்ய கணை மழை விலக்கி நின்றான். | (203-1) | | 825. | விறல் அதிகாயன் வீழ, வெந் திறல் அரக்கன் மைந்தர் குறுகினர், மும்மையான ஆயிர கோடி உள்ளார்; எறி கடற் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்து, செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர், தெழிக்கும் சொல்லார். | (207-1) | | 826. | வருதலும் அரக்கன், மற்று(அவ்) வானரச் சேனை பின்னும் பொரு சினம் திருகி முற்றா, பொங்கு அழல் என்னப் பொங்கி, மரமொடு மலைகள் ஏந்தி, மாதிரம் மறைய, வல்லே உரும் எனச் சொரிய வீசி உடற்றினர், ஒழிவு இலாதார். | (209-1) | | 827. | மற்றும் திறல் வானர வீரர்கள் யாரும், கொற்றம் கொள் இராவணன் மைந்தர் குலைந்தே முற்றும்படி மோதினர்; மோத முடிந்தே அற்று, அங்கு அவர் யாவரும் ஆவி அழிந்தார். | (250-1) | | 828. | அளப்பு இல் மைந்தர் எல்லாம், ஆனை, தேர், பரி, ஆள் என்னும் வழக்குறும் சேனை வெள்ளம் அளப்பு இல மடிய, தாமும் களத்திடைக் கவிழ்ந்தார் என்ற மொழியினைக் காதில் கேளா. துளக்கம்இல் அரக்கன், மேருத் துளங்கியது என்ன, சோர்ந்தான். | (261-1) |
|
|
|