பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள் 929

845.

மத்த மதக் கரியோடு மணித் தேர்
தத்துறு வாசி, தணப்பு இல காலாள்,
அத்தனை வெள்ளம் அளப்பு இல எல்லாம்,
வித்தக மானிடன் வாளியின், வீந்த.

 

                                             (16-2)
 

846.

இப் படையோடும் எழுந்து இரவின்வாய்
வெப்பு உறு வன் கவி வீரர்கள் ஓதை
எப் புறமும் செவிடு உற்றதை எண்ணி,
துப்புறு சிந்தையர் (வீரர்) தொடர்ந்தார்.

 

                                             (20-1)
 

847.

தேர் நிரை சென்றது; திண் கரி வெள்ளக்
கார் நிரை சென்றது; கால் வய வாசித்
தார் நிரை சென்றது; தாழ்வு அறு காலாள்
பேர் நிரை சென்றது; பேசுவர் யாரே?
 

                                             (22-1)
 

848.

‘ஐய! கேள்; சிவன் கை  வாள்  கொண்டு,  அளப்ப  அரும்
                                    புவனம் காக்கும்
வெய்யவன் வெள்ளச் சேனைத் தலைவன் விழுமம் பெற்றோர்,
கை உறும் சேனையோடும், கடுகினர் கணக்கிலாதோர்,
மொய்படைத் தலைவர்’ என்று,  ஆங்கு   அவர்   பெயர்
                                    மொழியலுற்றான்.
 

                                             (29-1)
 

849.

‘இன்னவர் ஆதியர் அளப்பிலோர்; இவர்
உன்ன அருந் தொகை தெரிந்து உரைக்கின், ஊழி நாள்
பின்னரும் செல்லும்’ என்று ஒழியப் பேசினான்;
அன்ன போர் அரக்கரும் களத்தை அண்மினார்.

 

                                              (35-1)
 

850.

கொடுமரத்திடை இராகவன் கோத்த வெம் பகழி
அடல் அரக்கர் என்று உரைத்திடும் கானகம் அடங்கக்
கடிகை உற்றதில் களைந்தது கண்டு, விண்ணவர்கள்,
‘விடியலுற்றது நம் பெருந் துயர்’ என வியந்தார்.

 

                                              (58-1)