- இந்த இல்ககுவனே வில்லாளியான (அதிகாயனுடன்) போர் செய்ய வேண்டும் என்று,; நாரணன் முன் சொல்லாடினன் - நாராயணனின் அவதாரமாகிய இராமபிரானிடம் (அந்த அதிகாயனைப் பற்றிய) செய்திகளைத் கூறினான்; அன்னவை சொல்லுதுமால் - அவற்றைச் சொல்லுவோம். |
நல்லாறு - நல்ல அறவழி. பண்புத்தொகை. |
(54) |
| 7781. | ‘வார் ஏறு கழற் சின வாள் அரி எம் போர் ஏறொடு போர் புரிவான் அமையா, தேர் ஏறு சினக் கடு வெந் தறுகண் கார் ஏறு என வந்த கதத் தொழிலோன். |
வார் ஏறு கழற்சின வாள் அரி - (இவ்வதிகாயன்) கச்சினால் கட்டப்பட்ட வீரக் கழல் அணிந்த சினங்கொண்ட கொடிய ஆண் சிங்கம் போன்றவனாகிய; எம் போர் ஏறொடு போர் புரிவான் அமையா - போரில் வல்ல எம் இலக்குவனோடு போர் புரிவதற்கு உடன்பட்டுத்; தேர் ஏறு சினக் கடு வெந் தறுகண் - தேரில் ஏறி வந்த சினமும் கொடிய அஞ்சாமையும் கொண்ட; கார் ஏறு என வந்த கதத் தொழிலோன் - கரிய மேகம் என்னுமாறு வந்த சினம் மிக்க தொழிலை உடையவன். |
வார் ஏறு - கச்சினால் கட்டப்பட்ட, அரி - சிங்கம், தறுகண்மை - அஞ்சாமை, கதம் - சினம். அமையா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். தொழிலோன் - வினையாலணையும் பெயர். |
(55) |
| 7782. | ‘ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான், தேவாசுரர் ஆதியர் செய் செருவில், சாவான் இறையும், சலியா வலியான், மூவா முதல் நான்முகனார் மொழியால். |
ஓவா நெடு மாதவம் ஒன்று உடையான் - நீங்காத மிகப் பெருந்தவம் ஒன்று உடையவன்; மூவா முதல் நான்முகனார் மொழியால் - கெடாத முதற்பொருளாகிய பிரமன் தந்த வரத்தால்; தேவாசுரர் ஆதியர் செய் செருவில் - தேவாசுரர் முதலியோர் செய்த போரில்;சாவான் - சாவாமல்; இறையும் சலியா வலியான் - சிறிது கூட சலிப்படையாத வலி பெற்றவன். |