| 858. | விசை கண்டு உயர் வானவர் விண் இரிய, குசை தங்கிய கோள் என, அண்டமொடு எண் திசை எங்கணும் நின்று திரிந்துளதால்- பசை தங்கு களத்து ஒரு பாய் பரியே. |
(96-1) |
| 859. | மற்றும் படை வீரர்கள் வந்த எலாம் உற்று அங்கு எதிரேறி உடன்று, அமர்வாய் வில் தங்கும் இலக்குவன் வெங் கணையால், முற்றும் முடிவு எய்தி முடிந்தனரால். |
(100-1) |
20. மகரக்கண்ணன் வதைப் படலம் |
| 860. | இந்திரியத்தை இகழ்ந்தவன், அந்தோ! மந்திர வெற்றி வழங்க வழங்கும் இந்திரம் அற்றது எனக் கடிதிகொல்? வந்தது என், வில் தொழிலைக் கொலை மான? |
(5-1) |
| 861. | அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி, தம்பிதன் கவசமீதே இரட்டி சாயகங்கள் தாக்கி, வெம்பு இகல் அனுமன்மீதே வெங் கணை மாரி வித்தி, உம்பர்தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான். |
(19-1) |
| 862. | ‘இந்திரன் பகைஞன் போல இவனும் ஓர் மாய வீரன்; தந்திரக் குரக்குச் சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான்; எந்திரம் ஆகிப் பார்த்த இடம் எலாம் தானே ஆனான்; அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர்?’ என அமலன் சொன்னான். |
(29-1) |
| 863. | மற்று அவன் இறத்தலோடும், மறைகளும் தேடிக் காணாக் கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ளப் |