| பற்றி, அங்கு அரக்கர் தானை வெள்ளம் அத்தனையும் பாரில் அற்றவை அழிந்து சிந்த அறுத்து, ஒரு கணத்தில் மாய்த்தான். | (31-1) | | 864. | மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிரத் தோளான்; தொடர்ந்தனர் அரக்கர், பின்னும்; தொடர்ந்தவர் தம்மை எல்லாம் கடந்தனர், கவியின் வீரர்; களத்திடைக் கணத்தில் மாய்த்தார்; நெடுந் திரைப் பரவைமீது நிறைந்தது, குருதி நீத்தம். | (38-1) | 21. பிரமாத்திரப் படலம் | | 865. | தலைகளை நோக்கும்; தான் தன் சரங்களை நோக்கும்; தன்கைச் சிலையினை நோக்கும்; செம் பொன் தேரினை நோக்கும்; செய்த கொலைகளை நோக்கும்; கொன்ற கொற்றவர் தம்மை நோக்கும்; அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய நோக்கும். | (25-1) | | 866. | ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய, பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில் சீர்த்த வீரியன் இளையவன் இராமன்மேல் செறிய, தூர்த்த வாளியன் சிலையொடும் விசும்பினைத் தொடர்ந்தான். | (77-1) | | 867. | இன்னது இவ் வழி நிற்க, மற்று இருஞ் சமர்க்கு உடைந்தே, துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல், |
|
|
|