பக்கம் எண் :

94யுத்த காண்டம் 

அதிகாயன்     பிரமனால் சாவாமையும் சலியாமையும் ஆகிய வரம்
பெற்றவன்.  ஓவா  -  நீங்காத, ஒழியாத, இறையும் - சிறிதும், மூவா -
கெடாத.    மாதவம்    -   உரிச்சொல்   தொடர்,   தேவாசுரர்   -
உம்மைத்தொகை, செய்செரு - வினைத்தொகை.
 

                                                  (56)
 

7783.‘கடம் ஏய் கயிலைக் கிரி, கண்ணுதலோடு
இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை,
திடமே உலகில் பல தேவரொடும்,
வட மேரு எடுக்க, வளர்த்தனனால்.
 

கடம் ஏய் கயிலைக் கிரி - காடுகள் பொருந்திய கயிலை மலையை;
கண்ணுதலோடு   இடம்   ஏற எடுத்தனம்   என்று   -   நெற்றிக்
கண்ணையுடைய   சிவபிரானோடு   அடியோடு   (நாம்)    பெயர்த்து
எடுத்தனம்  என்பதற்காக;  இவனைப்  பல  தேவரோடும்  உலகில்
திடமே வடமேரு  எடுக்க
 -  இவ்வதிகாயனைப்  பல தேவர்களோடு
உலகில் வலிமை மிக்க வடமேரு மலையை   எடுக்க;  வளர்த்தனன்  -
வளர்த்தான்.
 

கடம் -  காடு,  ஏய்  -  பொருந்திய, எடுத்தனம் - பன்மை சிறப்புக்
குறித்து வந்தது. ஆல் - அசை.
 

                                                  (57)
 

7784.‘மாலாரொடு மந்தரம் மாசுணமும்
மேலாகிய தேவரும் வேண்டும் எனா,
ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய,
காலால் நெடு வேலை கலக்கிடுமால்;
 

மாலாரொடு   மந்தரம் மாசுணமும் - (இவன்) திருமாலும் மந்தர
மலையும் வாசுகி  என்ற  பாம்பும்;  மேலாகிய  தேவரும் வேண்டும்
எனாது
 -  சிறப்புடைத்  தேவர்களும் (கடைவதற்கு உதவ) வேண்டும்
என்னாது; ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய - ஆலகால நஞ்சும்,
அருமையான   அமிழ்தமும்  வெளிப்பட்டுத்  தோன்றுமாறு;  காலால்
நெடுவேலை கலக்கிடும்
 -  தன்  காலாலேயே  பெரிய பாற்கடலைக்
கலக்க வல்லவன்.
 

கடைய  வல்லவன்  என்றபடி மாலார் - திருமால், மாசுணம் - பாம்பு
(வாசுகி) வேலை - கடல். அமைதல் - வெளிப்படல். ஆல் - அசை.
 

                                                  (58)
 

7785.‘ஊழிக்கும் உயர்ந்து, ஒரு நாள் ஒருவாப்
பாழித் திசை நின்று சுமந்த, பணைச்