பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 95

சூழிக் கரி தள்ளுதல் தோள் வலியோ?
ஆழிக் கிரி தள்ளும், ஓர் அங்கையினால்;
 

ஊழிக்கும்     ஒருவா உயர்ந்து - ஊழிக்காலத்திலும் அழியாமல்
மேம்பட்டு  உயர்ந்து;  ஒருநாள்  பாழித்  திசை  நின்று  சுமந்த  -
ஒருநாளும்  (நீங்காமல்)  வலிய  திசைகளில்  நின்று சுமந்த; பணைச்
சூழிக்கரி தள்ளுதல்  தோள்  வலியோ
- பருத்த முகபடாம் அணிந்த
திசை   யானைகளைத்   தள்ளுதல்   தோள்  வலிமையாகுமா?  ஓர்
அங்கையினால் ஆழிக்கிரி  தள்ளும்
- (இவ்வதிகாயன்) ஒப்பற்ற தன்
உள்ளங்கையினால் சக்கரவாள மலையையும் தள்ளி விடுவான்.
 

ஒருவாமல்  - அழியாமல்  பாழி  -  வலிமை,  சூழி  -  முகபடாம்.
ஆழிக்கிரி - சக்கரவாள மலை. பாழித்திசை - பண்புத்தொகை.
 

                                                  (59)
 

7786.‘காலங்கள் கணக்கு இற, கண் இமையா
ஆலம் கொள் மிடற்றவன், ஆர் அழல்வாய்
வேல் அங்கு எறிய, கொடு, ‘விட்டது நீள்
சூலம்கொல்?’ எனப் பகர் சொல் உடையான்;
 

கணக்கு இற காலங்கள்கண் இமையா - கணக்கற்ற காலங்கள் கண்
இமைத்தல்  இல்லாத;  ஆலம்கொள் மிடற்றவன் - ஆலகால நஞ்சைக்
கழுத்தில்  கொண்ட  (நீலகண்டனாகிய) சிலபிரான்; ஆர் அழல் வாய்
வேல்  அங்கு  எறிய
 -  நிறைந்த  நெருப்பு  பொருந்திய வேலினை
(போரில்  இவ்வதிகாயன்  மீது)  எறிந்த பொழுது; கொடு விட்டது நீள்
சூலம் கொல் என
- (அதனைக் கையில் பற்றிக்) கொண்டு (நீ) விட்டது
(இந்த)  நீண்ட  சூலம் போலும்  என்று;  பகர்  சொல் உடையான் -
செல்லுகின்ற சொல்லை உடையவன்.
 

ஆலம்     கொள்மிடற்றவன் - சிவபிரான். பாற்கடலைக் கடைந்த
போது   தோன்றிய   நஞ்சினை  உண்டு  அமரர்களைக்  காத்தவன்,
"விண்ணோர்  அமுதுண்டும் சாவ நீ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டும்
இருந்தருள்  செய்குவாய்" என்பர் இளங்கோவடிகள். கொடு - கையில்
பற்றிக்கொண்டு,
 

                                                  (60)
 

7787.பகை ஆடிய வானவர் பல் வகை ஊர்
புகை ஆடிய நாள், புனை வாகையினான்,

"மிகை ஆர் உயிர் உண்" என வீசிய வெந்
தகை ஆழி தகைந்த தனுத் தொழிலான்;