இந்திரன் என்றும் கொண்டு பொருளுரைக்க. தேவர் படையை நுண்துகள் செய்து, வயிரப் படை தள்ளிய வாளியினான் என அமையும். அயிர் - மணல், வயிரப்படை - வச்சிராயுதம். |
(62) |
| 7789. | ‘கறற்ான், மறை நூலொடு கண்ணுதல்பால்; முற்றாதன தேவர் முரண் படைதாம், மற்று ஆரும் வழங்க வலார் இலவும், பெற்றான்; நெடிது ஆண்மை பிறந்துடையான்; |
கண்ணுதல் பால் - நெற்றியில் கண்ணுடைய சிவபிரான் இடத்தில்; மறை நூலோடு கற்றான் - வேதங்களையும் போர் நூல்களையும் கற்றவன்; தேவர் முற்றாதன முரண் படைதாம் - தேவர் (செலுத்திப்) பழகாதனவாகிய வலிய படைக்கருவிகளை; மற்று ஆரும் வழங்கவலார் இலவும் பெற்றான் - பிறர் யாரும் செலுத்த வல்லவர் இல்லாதனவுமாகிய கருவிகளைப் பெற்றான்; நெடிது ஆண்மை பிறந்துடையான் - (அதனால்) மிகக் ஆண்மை தோன்றப் பெற்றுள்ளான். |
முற்றாதன - பழகாதன. தேவர் முற்றாதன என இயைக்க. மறை நூல் - உம்மைத் தொகை. 55 - 63 பாடல்களின் அதிகாயனது பேராற்றல் கூறப்பட்டது. |
(63) |
| 7790. | ‘அறன் அல்லது நல்லது மாறு அறியான்; மறன் அல்லது பல் பணி மாறு அணியான்; திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான்; "உறல் நல்லது, பேர் இசை" என்று உணர்வான்; |
நல்லது அறன் அல்லது மாறு அறியான் - (இவ்வதிகாயன்) நன்மை பயக்கும் அறன் இல்லாதது தவிர வேறு ஒன்று அறிய மாட்டான்; பல் பணி மறன் அல்லது மாறு அணியான் - பல அணிகலன்களாக வீரத்தைத் தவிர வேறு ஒன்றை அணிய மாட்டான்; திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான் - வலிமை இல்லாததாகிய (எந்த ஒரு) ஒப்பற்ற அருமையான உயிரையும் அழிக்க மாட்டான்; பேரிசை உறல் நல்லது என்று உணர்வான் - பெரும் புகழே அடைதற்கு உரிய நல்லது என்று உணர்வான். |
அதிகாயனது இப்பண்புகளைக் குறிப்பிட்டுள்ள படியால் அவன் வீரப்போர் செய்யும் பெருவீரன் என்பதையும் மாயப் போரைச் சிறிதும் விரும்பாதவன் என்பதையும் நாமறியலாம். இதனை அடுத்த பாடல் |