காட்டும். அறன் அல்லது - அறநெறி அன்றி, மாறு - வேறு, பணி - அணிகலன். திறன் அல்லது ஓர் உயிர் - வலிமையற்றதாகிய ஓருயிர். |
(64) |
| 7791. | காயத்து உயிரே விடு காலையினும் மாயத்தவர் கூடி மலைந்திடினும், தேயத்தவர் செய்குதல் செய்திடினும், மாயத் தொழில் செய்ய மதித்திலனால். |
காயத்து உயிரே விடு காலையினும் - (இந்த அதிகாயன் போர்க்களத்தில்) உடலின் உள்ள உயிரையே விட வேண்டிய காலம் வந்தாலும்; மாயத்தவர் கூடி மலைந்திடினும் - (தன்னோடு) வஞ்சனைத் தொழில் செய்வார் பலர் கூடிப் போரிட்டாலும்; தேயத்தவர் செய்குதல் செய்திடினும் - உலகில் உள்ளவர்கள் எல்லாம் (தனக்கு) எதிராக ஏமாற்றுப் (போரைச்) செய்தாலும்; மாயத் தொழில் செய்ய மதித்திலனால் - மாயத் தொழிலைச் செய்ய (எப்போதும்) மதித்துக் கருத மாட்டான். |
அதிகாயன் மாயத் தொழிலே செய்யாதவன் என்றவாறு. வான்மீகி அதிகாயனை மாயம் உணர்ந்தவன் என்று கூறுவார். காயம் - உடம்பு. 64 - 65 பாடல்களில் அதிகாயனது பண்பு நலன் கூறப்பட்டது. |
(65) |
அதிகாயன் வரலாறு |
| 7792. | ‘மது கைடவர் என்பவர், வானவர்தம் பதி கைகொடு கட்டவர், பண்டு ஒரு நாள், அதி கைதவர், ஆழி அனந்தனையும், விதி கைம்மிக, முட்டிய வெம்மையினார். |
அதி கைதவர் - மிக்க வஞ்சனை உடையவரான; மது, கைடவர் என்பவர் - மது கைடவர் என்ற பெயருடைய தானவர்கள்; வானவர் தம் பதிகைகொடு கட்டவர் - தேவர்களுடைய ஊரைக் கைப்பற்றிச் கொண்டு அழித்தவராவர்; பண்டு ஒருநாள் விதி கைம்மிக - முன்பு ஒரு காலத்தில் விதியானது மிகுதியாகத் தூண்ட; ஆழி அனந்தனையும் முட்டிய வெம்மையினார் - பாற்கடலில் திருப்பள்ளி கொண்டுள்ள (கடவுளாகிய) திருமாலையும் எதிர்த்த கொடுமை உடையோராவர். |