பக்கம் எண் :

10யுத்த காண்டம் 

நீலம் காட்டிய கண்டனும் நேமியும் - நீலநிறம் பொருந்திய
கண்டத்தை உடைய சிவனும், சக்கரப்படையை உடைய திருமாலும்;
ஏலும்   காட்டின்   எறிந்த   படை   எலாம் - பொருந்திய
போர்க்களத்தின்  கண்  எய்த ஆயுதங்களை எல்லாம்; தோலும்
காட்டி துரந்தனை மீண்டநின்
- நின் கேடகத்தைக் காட்டித்
துரத்தி மீண்டநின்; ஓலம் காட்டிலையோ?' எனும் ஓர் தலை -
வீர கர்ச்சனையை (அம்மனிதனிடம்) காட்டவில்லையோ?'
என்று மற்றோர் தலை சொல்லும்.
 

காடு, இங்கே பறந்தலையைக் குறித்தது. தோல் - கேடயம்.
இதற்குத்   தோல்வி   என்று பொருள் கூறலும்  ஆம். ஓலம்
காட்டுதல் - கர்ச்சித்தல்;   இதற்குக்   குரலைக்   காட்டுதல்
என்று பொருள் கொண்டு 'என்னோடு பேச மாட்டாயோ' எனப்
பொருளுங் கொள்வர். 
 

(18)
 

9204.

'துஞ்சினாய்கொல், துணை பிரிந்தேன்' எனும்; 

'வஞ்சமோ!' எனும்; 'வாரலையோ!' எனும்; 

'நெஞ்சு நோவ, நெடுந் தனியே கிடந்து,

அஞ்சினேன்!' என்று அரற்றும்;- அங்கு ஓர் தலை.* 

 

துஞ்சினாய்   கொல்,  துணை  பிரிந்தேன்' எனும்- நீ
உண்மையாக இறந்து விட்டாயோ? யான் என் துணையாக இருந்த
உன்னைப் பிரிந்தேனே!' என்று சொல்லும்; 'வஞ்சமோ!' எனும் 
'வாரலையோ' எனும்
- (நீ இறந்தாய் என்பது) 'வஞ்சனையோ' 
என்று சொல்லும். (உண்மையாகவே) 'என் முன் வரமாட்டாயோ!' 
என்று  சொல்லும்; நெஞ்சு நோவ, நெடுந்தனியே கிடந்து
நெஞ்சு  நோவுமாறு நெடுநேரம்  (தன் துன்பத்தோடு) தனித்துக் 
கிடந்த (பின்பு); 'அஞ்சினேன்' என்று அரற்றும், அங்கு ஓர் 
தலை
- 'அஞ்சினேன்'  என்று வாய்விட்டு அரற்றும் ஒருதலை.
 

பெருந்துயரிலிருப்போர் பலவாறு புலம்பிக் கதறிய பின்பு
சிறிது தமக்குத்தாமே புழுங்கிய வண்ணம் கிடப்பர். பின்பு
திடீரென்று வாய் விட்டு அரற்றுவர். இவ்வுலகியல் நடப்பைக்
கவனித்திருந்த   கவிஞன்  'நெஞ்சு  நோவ நெடுந்தனியே,
தனக்குத்தானே ஏக்குற்று புழுங்கிச் சிறிது  போது கிடந்த
இராவணன்  பின்பு திடீரென்று வாய் விட்டு அரற்றுவதாக
அமைத்திருக்கும்   நுட்பம்  அறிந்து  பாராட்டத்தக்கதாம்.
 

(19)
 

9205.

'காகம் ஆடு களத்திடைக் காண்பெனோ, 

யாகசாதனன் மௌலியொடும் பொறித்து;