பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்11

ஓகை மாதவர் உச்சியின் வைத்த நின் 

வாகை நாள்மலர்?' என்னும் - மற்று ஓர் தலை. 

 

யாகசாதனன் மௌலியோடும்- தேவேந்திரனுடைய முடியுடன்;
ஓகைமாதவர் நின் உச்சியின் பொறித்து வைத்த- (நீ அவனை
வெற்றி கண்டதனைக் கண்ட)   உவமை   மிக்க  தவமுனிவர்கள்
(நின்  வெற்றிக்கு  அறிகுறியாகப்)   பொறித்து   வைத்த; வாகை
நாள்   மலர்  காகம்   ஆடு    களத்திடைக்
- வாகையின்
அன்றலர்ந்த   மலர்மாலையை  இப்போது  காகங்கள்  (பிணங்களை
உண்டு)   ஆடுகின்ற  போர்க்களத்தின்   கண்;   காண்பேனோ'
என்னும்  மற்று   ஓர்   தலை
-  காணப்பெறுவனோ?'' என்று
மற்றோர் தலை சொல்லும்.
 

யாக சாதனன் - யாகங்களால் பதவி பெற்ற இந்திரன். 
 

(20)

9206.

'சேல் இயல் கண் இயக்கர்தம் தேவிமார், 

மேல் இனித் தவிர்கிற்பர்கொல், வீர! நின் 

கோல வில் குரல் கேட்டுக் குலுங்கித் தம் 

தாலியைத் தொடல்' என்னும் - மற்று ஓர் தலை. 

 

மற்று ஓர் தலை- மற்று ஒரு தலை; 'வீர! சேல் இயல் கண்
இயக்கர்   தம்   தேவிமார்
-   'வீரனே!   சேல் மீனை ஒத்த
கண்களை  உடைய  இயக்கர்  தம் மனைவியர்;  நின் கோலவில்
குரல் கேட்டுக் குலுங்கி
- நினது அழகிய வில்லின் நாண் ஒலி
கேட்டு   நடுங்கி;  தம் தாலியைத்   தொடல்  மேல்  இனித்
தவிர்கிற்பர் கொல்' என்னும்
- தத்தம் தாலியைத் தொட்டுப் 
பார்த்துக்கொள்ளும் இயல்பை இனிமேல் நீங்குவார்களோ?' என்று 
சொல்லும்.
 

இந்திரசித்து வாழ்ந்த காலத்தில் அவனது வில் நாணின்
ஒலி கேட்டு இயக்க மாதர்கள் தம் கணவர் உயிர்க்கு ஊறு
வந்ததாக நடுங்கித் தத்தம் தாலியைத்   தொட்டு அறுந்து
போய்விடுமோ  என   நடுங்கி நிற்பர்.   'இனி அங்ஙனம்
அவர்கள் நடுங்குதல் ஒழிவார்களோ?' எனத் தன் மகனது 
பகை நடுக்கும் ஆற்றலை நினைத்து இரங்கியவாறு. 
 

(21)
 

9207.

'கூற்றம் உன் எதிர் வந்து, உயிர் கொள்வது ஓர் 

ஊற்றம்தான் உடைத்து அன்று; எனையும் ஒளித்து 

ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் 

ஆற்றலாய்!' என்று உரைக்கும் - அங்கு ஓர் தலை.