எல்லை இல் ஆற்றலாய்! - எல்லை இல்லாத வல்லமையை உடையவனே! கூற்றம் உன் எதிர் வந்து- கூற்று உன் எதிரில் வந்து; உயிர் கொள்வது ஓர் ஊற்றம் தான் உடைத்து அன்று - உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையதன்று; எனையும் ஒளித்து ஏற்ற எவ்உலகு உற்றனை?'- (ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய்) எனக்குத் தெரியாமல்; மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய்?' என்று உரைக்கும் ஆங்கு ஓர் தலை- என்று வினவும் அங்கு ஒருதலை. |
இது இராவணின் பத்தாவது தலை கூறுவது. |
(22) |
இராவணன், மைந்தன் உடலைத் தேடிக் களம் புகுதல் |
| 9208. | இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து, |
| உன்னும் மாத்திரத்து ஓடினன், ஊழி நாள் |
| பொன்னின் வான் அன்ன போர்க்களம் புக்கனன், |
| நன் மகன்தனது ஆக்கையை நாடுவான். |
| |
இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து- இவ்வாறு இந்திரசித்தனை அழைத்து ஏங்குகின்ற இராவணன் எழுந்து; உன்னும் மாத்திரத்து ஓடினன் - நினைக்கும் அளவில் ஓடிச்சென்று; ஊழிநாள் பொன்னின் வான் அன்ன போர்க்களம் - ஊழி இறுதியில் தோன்றும் பொன்னிறமுடைய செவ்வானம் போன்று குருதியால் சிவந்து காட்டும் போர்க்களத்தில்; தனது நன்மகன் ஆக்கையை நாடுவான் புக்கனன் - தனது சிறந்த புதல்வனுடைய உடம்பைத் தேடுவதற்காகப் புகுந்தான். |
(23) |
| 9209. | தேவரே முதலாகிய சேவகர் |
| யாவரும் உடனே தொடர்ந்து ஏகினார், |
| 'மூவகைப் பேர் உலகின் முறைமையும் |
| ஏவது ஆகும்?' என்று எண்ணி இரங்குவார். |
| |
தேவரே முதலாகிய சேவகர் யாவரும் - தேவர் முதலிய பணியாளர்கள் யாவரும்; உடனே தொடர்ந்து ஏகினார் - இராவணனுடனே தொடர்ந்து சென்றவர்களாய்; மூவகைப் பேர் உலகின் முறைமையும் - (இராவணனின் கோபத்தால்) மூவுலகங்களின் முறைமையும்; ஏவது ஆகும்?' என்று எண்ணி |