இரங்குவார் - 'இனி என்னாகுமோ?' என்று எண்ணி இரங்குவாராயினர். |
(24) |
| 9210. | அழுதவால் சில; அன்பின போன்று, அடி |
| தொழுதவால் சில; தூங்கினவால் சில; |
| உழுத யானைப் பிணம் புக்கு ஒளித்தவால் - |
| கழுதும் புள்ளும், அரக்கனைக் காண்டலும்.* |
| |
கழுதும் புள்ளும் அரக்கனைக் காண்டலும்- (போர்க்களத்தில் பிணங்களைத் தின்று கொண்டிருந்த) பேய்களும் கழுகு முதலிய பறவைகளும் இராவணனைக் கண்டவுடனே; சில அழுத, சில அன்பின போன்று அடி தொழுத- அஞ்சிச் சில அழுதன, சில அவன்பால் அன்பு கொண்டவை போலத் தொழுதன; சில தூங்கின, உழுத யானைப் பிணம்புக்கு ஒளித்த- (பொய்யாகச்) சில தூங்கின (சில) ஆனைப் பிணங்களைத் தலையால் உழுது வழி செய்து கொண்டு புகுந்து ஒளிந்து கொண்டன. |
கழுது - பேய், புள் - கழுகு முதலான பறவைகள், அசைநிலைகள். |
(25) |
| 9211. | கோடி கோடிக் குதிரையின் கூட்டமும், |
| ஆடல் வென்றி அரக்கர்தம் ஆக்கையும், |
| ஓடை யானையும், தேரும், உருட்டினான், |
| நாடினான், தன் மகன் உடல், நாள் எலாம்.* |
| |
தன் மகன் உடல் நாடினான் - (இராவணன்) தன் உடலைத் தேடுபவனாய்; கோடி கோடிக் குதிரையின் கூட்டமும் - கோடி கோடிக் குதிரைப் பிணங்களின் கூட்டங்களையும்; ஆடல் வென்றி அரக்கர்தம் ஆக்கையும் - வலிமையும் வெற்றியுமுடைய அரக்கர் தம் உடம்புகளையும்; ஓடை யானையும் தேரும் - முக பட்டத்தை உடைய யானைப் பிணங்களையும் தேர்களையும்; நாள் எலாம் உருட்டினான்- ஒருநாள் முழுவதும் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். |
(26) |
| 9212. | மெய் கிடந்த விழி வழி நீர் விழ, |
| நெய் கிடந்த கனல் புரை நெஞ்சினான், |
| மொய் கிடந்த சிலையொடு மூரி மாக் |
| கய் கிடந்தது கண்டனன், கண்களால். |