மெய் கிடந்த விழி வழி நீர்விழ- உடம்பில் பொருந்திய (பத்துத் தலைகளிலும் உள்ள) இருபது விழிகளிலும் நீர் உழுக; நெய் கிடந்த கனல்புரை நெஞ்சினான் - நெய் பெய்த நெருப்புப் போல எரியும் நெஞ்சினையுடைய இராவணன்; மொய் கிடந்த சிலையொடு மூரிமாக்கய் - வலிமை பொருந்திய வில்லோடு வலிய பெரிய கை; கிடந்தது கண்டனன் கண்களால்- போர்க்களத்தில் விழுந்து கிடந்ததைக் கண்களால் கண்டான். |
கை என்பது எதுகை நோக்கிக் 'கய்' எனப் போலியாயிற்று. |
(27) |
| 9213. | பொங்கு தோள்வளையும் கணைப் புட்டிலோடு |
| அங்கதங்களும் அம்பும் இலங்கிட, |
| வெங் கண் நாகம் எனப் பொலி வெய்ய கை |
| செங் கையால் எடுத்தான், சிரம் சேர்த்தினான். |
| |
பொங்க தோள்வளையும் கணைப்புட்டிலோடு- ஒளி விளங்குகின்ற தோள் வளையும் அம்புப் புட்டிலோடு; அங்கதங்களும் அம்பும் இலங்கிட- வாகுவலயங்களும் அம்பும் விளங்கிட; வெங்கண் நாகம் எனப் பொலிவெய்யகை- கொடுங்கண்ணையுடைய நாகம் போலப் பொலிகின்ற இந்திரசித்தின் விரும்பத்தக்க கையை; செங்கையால் எடுத்தான், சிரம் சேர்த்தினான் - இராவணன் தன் சிவந்த கையால் எடுத்துத் தலைமேல் வைத்துக் கொண்டான். |
அங்கதம் - வாகுவலயம். கொடுமையும் வடிவும் தோன்ற இந்திரசித்தின் கையினுக்கு வெங்கண் நாகம் உவமை கூறப்பெற்றது. புத்திர பாசத்தால் துடிக்கும் இராவணன் இந்திரசித்தின் கையினைக் கண்டவுடன் பேரன்பின் காரணமாக அதனை ஒரு புனிதப் பொருளினைப் போலச் சிரமிசை வைத்துக் கொள்ளுகின்றான். |
(26) |
| 9214. | கல் திண் மார்பில் தழுவும்; கழுத்தினில் |
| சுற்றும்; சென்னியில் சூட்டும்; சுழல் கணோடு |
| ஒற்றும்; மோந்திட்டு உருகும்; உளைக்குமால்; |
| முற்றும் நாளின் விடும் நெடு மூச்சினான். |
| |
முற்றும் நாளின் விடும் நெடுமூச்சினான்- (மேலும்) ஆயுள் முடியும்நாளில் விடுகின்றது போன்ற நீண்ட மூச்சினையுடையவனாகிய இராவணன் (அக்கையினை); கல்திண் மார்பில் தழுவும் கழுத்தினில் சுற்றும்- மலை போன்ற மார்பில் தழுவுவான் பின் |