கழுத்தினில் (மாலைபோலச்) சுற்றுவான்; சென்னியில் சூட்டும்; சுழல் கணோடு ஒற்றும்- தலையில் (கண்ணிபோல) சூட்டுவான் சுழல்கின்ற தன் கண்களிலே வைத்து ஒற்றிக் கொள்வான்; மோந்திட்டு உருகும்; உளைக்கும்- அதைத்தன் மூக்கில் வைத்து மோந்து பார்த்து மனம் உருகுவான்; வருந்துவான். |
முற்றும் நாள் - இறக்கும் நாள், ஆல் - அசை |
(29) |
| 9215. | கை கண்டான், பின் கருங் கடல் கண்டென, |
| மெய் கண்டான், அதன்மேல் விழுந்தான்அரோ - |
| பெய் கண் தாரை அருவிப் பெருந் திரை, |
| மொய் கண்டார் திரை வேலையை மூடவே. |
| |
கை கண்டான்- இந்திரசித்தனின் கையைக் கண்ட இராவணன்; பின் கருங்கடல் கண்டென மெய் கண்டான்- பின்பு கருங்கடலைக் கண்டாற் போன்ற அவன் உடம்பினைக் கண்டான்; பெய் கண் தாரை அருவிப் பெருந்திரை- கண்கள் தாரை தாரையாகப் பொழிகின்ற கண்ணீர் அருவியின் பெரிய அலைகள்; மொய் கண்டார் திரை வேலையை மூடவே - வலிமை கொண்டு ஆரவாரிக்கின்ற அலைகளோடு கூடிய கடலையும் சென்று மூடுமாறு; அதன்மேல் விழுந்தான் அரோ! - அழுதுகொண்டு அவ்வுடம்பின் மீது விழுந்தான். |
கைகண்டான் - வினையால் அணையும் பெயர். இங்கு இராவணனை உணர்த்தியது. கருங்கடல் - கருமையும் பரப்பும் பற்றி இந்திரசித்தின் உடம்பிற்கு உவமையாயிற்று. மொய் - வலிமை, ஆர்திரை - வினைத்தொகை. அரோ - அசை. |
(30) |
| 9216. | அப்பு மாரி அழுந்திய மார்பைத் தன் |
| அப்பு மாரி அழுது இழி யாக்கையின் |
| அப்பும்; மார்பில் அணைக்கும்; அரற்றுமால்; |
| அப் புமான் உற்றது யாவர் உற்றார்அரோ! |
| |
அப்பு மாரி அழுந்திய மார்பை - அம்பு மாரி அழுந்தி இருந்த இந்திரசித்தின் மார்பை; அப்புமாரி அழுது இழி தன் யாக்கையின் - அழுது அழுது கண்ணீர் மாரி இழிகின்ற தன் உடம்பின் கண்; அப்பும், மார்பில் அணைக்கும் அரற்றுமால்- ஒற்றிக் கொள்வான். பின் மார்பில் அணைத்துக் கொள்வான்; வாயால் அரற்றுவான்; அப்புமான் உற்றது யாவர் உற்றார் - அந்த ஆண்மையுள்ள |