பக்கம் எண் :

16யுத்த காண்டம் 

இராவணன் உற்ற துன்பம் இவ்வுலகில் யாவர் அடைந்திருக்கின்றார்கள்!
 

'அம்புமாரி', 'அப்புமாரி' எனத் தம்மின வன்தொடராயிற்று. 
இரண்டாவது  அப்புமாரி  கண்ணீர்  மழை  என்ற பொருளது. 
அப்புதல் -  ஒற்றிக்கொள்ளுதல்  புமான் -  ஆடவன்  என்ற 
பொருளுடைய வடசொல்.
 

இச்செய்யுளில் நான்கடியினும் முதற்சீர் முழுமையும் ஒத்து
வந்தமையால் 'யமகம்' என்னும் சொல்லணி அமைந்தது. 
 

(31)
 

9217.

பறிக்கும், மார்பின் பகழியை; பல் முறை 

முறிக்கும்; மூர்ச்சிக்கும்; மோக்கும்; முயங்குமால்; 

'எறிக்கும் வெங் கதிரோடு உலகு ஏழையும் 

கறிக்கும், வாயில் இட்டு, இன்று' எனக் காந்துமால். 

 

மார்பின் பகழியைப் பறிக்கும் - (இந்திரசித்தின்) மார்பில் 
தைத்திருக்கும் அம்புகளை அவன்  மார்பிலிருந்து (இராவணன்) 
பறிப்பான்; பல்முறை  முறிக்கும்; மூர்ச்சிக்கும்; மோக்கும்; 
முயங்கும்
-  அவற்றைப்   பல  முறை  முறிப்பான்;  பின்பு 
மூர்ச்சையுறுவான்; பின் மூக்கில்  வைத்து  மோந்து பார்ப்பான்; 
பின் மார்பில் அணைப்பான்; எறிக்கும் வெங்கதிரோடு உலகு 
ஏழையும்
- வெயில் வீசும் வெப்பமுள்ள சூரியனோடு உலகம் 
ஏழினையும்; வாயில் இட்டு இன்று கறிக்கும் எனக் காந்தும் 
- வாயில் இட்டு இன்று கறிப்போம்' என்று வெகுள்வான்.
 

இந்திரசித்தின்   மார்பில்  தைத்திருந்த  அம்புகளைப்
பறித்தலும், முறித்தலும் செய்தது. அவன் உயிரை வாங்கியதே
என்னும் வெறுப்பினாலாம். கறித்தல் - கடித்தல். கறிக்கும்
என்பது உம்மீற்றுத் தன்மைப் பன்மை வினைமுற்று. ஆல் -
அசைகள். 
 

(32)
 

9218.

தேவரோடு முனிவரும், சீரியோர் 

ஏவரோடும், இடம் இன்றி நின்றவன் - 

'மூவரோடும், உலகு ஒரு மூன்றொடும் 

போவதேகொல், முனிவு?' எனும் பொம்மலான். 

 

தேவரோடு -    தேவர்களோடு;   முனிவரும்,  சீரியோர் 
ஏவரோடும்
-  முனிவர்களும்,  சிறந்துள்ள   ஏவரோடும்; இடம் 
இன்றி நின்றவன் முனிவு -
சமானமின்றி நின்றவனாய இராவணன்
சீற்றம்;   மூவரோடும்    உலகு    ஒரு     மூன்றோடும் -
மும்மூர்த்திகளோடும் மூன்று உலகினோடும்; போவதே கொல்? எனும்