பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்17

பொம்மலான் - போய் விடக்கூடியதோ? எனும் (அச்சத்தை
ஏற்படுத்தும்) பெருஞ்சீற்றமுடையவனானன். 
 

(33)
 

இந்திரசித்தின் தலைகாணாது இராவணன் அரற்றுதல்
 

9219.

கண்டிலன் தலை; 'காந்தி, அம் மானிடன்

கொண்டு இறந்தனன்' என்பது கொண்டவன், 

புண் திறந்தன நெஞ்சன், பொருமலன், 

விண் திறந்திட, விம்மி, அரற்றினான்: 
 

தலை  கண்டிலன்,  காந்தி -  (இந்திரசித்தின்  கையையும்
உடம்பையும் கண்ட இராவணன்) தலையைக் காணாதவனாய் மனம்
எரிந்து;  அம்  மானிடன்  கொண்டு  இறந்தனன்   என்பது
கொண்டவன்
- அம்மனிதன் (இலக்குவன்) எடுத்துச் சென்றனன்
என்று அறிந்துகொண்டு; புண்திறந்தன நெஞ்சன் பொருமலன் -
புண் திறந்தாற் போன்ற நெஞ்சத்தோடு பொருமுகின்ற இராவணன்; 
விண்திறந்திட, விம்மி, அரற்றினான்- விண்முகடு பிளக்குமாறு 
விம்மி விம்மி வாய்திறந்து அரற்றலானான்.
 

காந்துதல் - சினத்தல், இறத்தல் - கடத்தல். பொருமுதல்
- விம்முதல் - துன்பமுறல் எனினுமாம். 
 

(34)

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

9220.

'நிலையின் மாதிரத்து நின்ற யானையும், நெற்றிக் 

கண்ணன்

மலையுமே, எளியவோ, நான் பறித்தற்கு? மறு இல் 

மைந்தன்

தலையும் ஆர் உயிரும் கொண்டார்அவர் உடலோடும் 

தங்க,

புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் 

போலும்!

 

நிலையின்  மாதிரத்து  நின்ற  யானையும்- நிலைத்துள்ள
எட்டுத்   திசையிலும்  நின்ற  யானைகளும்;   நெற்றிக்கண்ணன்
மலையுமே
- நெற்றிக்கண்ணை உடைய சிவன் தங்கியுள்ள கயிலை
மலையுமே;   நான்   பறித்தற்கு  எளியவோ?- யான் பறித்தற்கு
எளிய ஆயினவோ? (இம்மானிடர் எளியரல்லரோ);  மறுஇல் மைந்தன்