சங்குகளை; கொன்னே ஊதி- அச்சம் தோன்றுமாறு ஊதி; தோள் புடை கொட்டிக்கொடு- தோள்களைப் பக்கமாகக் கொட்டிக்கொண்டு; சார்ந்தார்- போர் செய்ய வந்து சேர்ந்தனர்; வையம் என் ஆம்- நிலவுலகம் என்ன ஆகுமோ; என் படும் வானம் - வானுலகம் என்ன பாடு படப்போகிறதோ; திசை ஏதாம் - (நிலை பெற்றுள்ள) திசைகள்தான் என்ன ஆகுமோ? |
(187) |
9486. | ஆர்த்தார் அன்னார்; அன்ன கணத்தே, அவர் |
| ஆற்றல் |
| தீர்த்தானும் தன் வெஞ் சிலை நாணைத் |
| தெறிப்புற்றான்; |
| பேர்த்தான் பொன் - தோள்; முற்றும் அளந்தான் பிறழ் |
| சங்கம் |
| ஆர்த்தால் ஒத்தது, அவ் ஒலி, எல்லா உலகுக்கும். |
|
அன்னார்- அந்த அரக்கர்கள்; ஆர்த்தார் - ஆரவாரம் செய்தார்கள்; அன்ன கணத்தே- அந்தக் கணத்திலேயே; அவர் ஆற்றல் தீர்த்தானும்- அவர்களின் ஆற்றலை அழித்தவனாகிய இராமனும்; தன் வெஞ்சிலை நாணைத் தெறிப்புற்றான்- தன்னுடைய கொடிய வில்லின் நாணைத் தெறித்தான்; அவ் ஒலி - அப்போது எழுந்த ஒலியானது; பொன் தாள் பேர்த்தான்- தன் பொற்கால்களைப் பெயர்த்தவனாய்; முற்றும் அளந்தான் - எல்லா உலகங்களையும் அளந்தவனாகிய திருமால் (கரத்தில் ஏந்தும்); பிறழ் சங்கம் - விளங்குகின்ற சங்கு; ஆர்த்தால் ஒத்தது- ஆரவாரித்ததைப் போன்றிருந்தது. |
(188) |
கலி விருத்தம் (வேறு) |
9487. | பல் ஆயிர கோடியர்; பல் படை நூல் |
| வல்லார்; அவர் மெய்ம்மை வழங்க வலார்; |
| எல்லா உலகங்களும் ஏறிய போர் |
| வில்லாளர்; அரக்கரின் மேதகையார். |
|
அரக்கரில் மேதகையார்- அரக்கரிலே மேம்பட்டவராகிய அவர்கள்; பல் ஆயிர கோடியர்- பல ஆயிரம் கோடிப் பேர்; பல் படை நூல் வல்லார்- பலவாகிய படைக்கலக் கலையில் |