வல்லவர்கள்; அவர் மெய்ம்மை வழங்க வ(ல்)லார்- அவர்கள் செம்மையான முறையில் (படைக்கலங்களைச்) செலுத்த வல்லவர்கள்; எல்லா உலகங்களும் ஏறிய போர் வில்லாளர்- அனைத்து உலகங்களிலும் சிறப்பால் ஓங்கிய போரில் வில்லை ஆளும் திறம் உடையவர்கள். |
(189) |
9488. | வென்றார், உலகங்களை, விண்ணவரோடு |
| ஒன்றா உயர் தானவர் யூகம் எலாம்; |
| கொன்றார் நிமிர் கூற்று என, எவ் உயிரும் |
| தின்றார்;- எதிர் சென்று, செறிந்தனரால். |
|
உலகங்களை- உலகங்களோடு; விண்ணவரோடு ஒன்றா உயர் தானவர் யூகம் எலாம் - தேவர்களோடு இசைந்து வாழாமல் உயர்ந்த தானவர்களின் சேனை அணிகளையெல்லாம்; வென்றார் - வென்றார்கள்; நிமிர் கூற்று என- (தோல்வி அறியாமல்) ஓங்கி நிற்கும் கூற்றுவனைப் போல; எவ் உயிரும் தின்றார் - எல்லா உயிர்களையும் தின்றவராய்; எதிர் சென்று செறிந்தனர்- எதிராகச் சென்று குழுமினார்கள். |
தானவர் - அரக்கரில் ஓர் இனம். |
(190) |
9489. | வளைத்தார் மத யானையை, வன் தொழுவில் |
| தளைத்தார் என வந்து, தனித் தனியே |
| உளைத்தார் உரும்ஏறு என; ஒன்று அல போர் |
| விளைத்தார்; இமையோர்கள் வெதும்பினரால். |
|
மத யானையை வளைத்தார்- மதங்கொண்ட யானைகளை வளைத்தவர்களாய்; வன் தொழுவில் தளைத்தார் என வந்து- வலிய தொழுவத்திலே கட்டி வைத்தவர் போல வந்து; தனித்தனியே உறும் ஏறு என உளைத்தார் - தனித்தனியாகப் பேரிடி போல ஆரவாரித்தனர்; ஒன்று அல பல போர் விளைத்தார்- ஒரு வகைப்பட்டதாக அல்லாமல் பல வகையான போர்களைச் செய்தார்கள்; இமையோர்கள் வெதும்பினர்- தேவர்கள் (அதுகண்டு) வெதும்பினார்கள். |
(191) |
9490. | விட்டீய வழங்கிய வெம் படையின் |
| சுட்டீய நிமிர்ந்த சுடர்ச் சுடரும் |