பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்177

கண் தீயும், ஒருங்கு கலந்து எழலால்,

உள் தீ உற வெந்தன, ஏழ் உலகும்.
 

விட்டீய- (பகைவர்கள் களத்தை) விட்டோடுமாறு; வழங்கிய
வெம்படையின்  
-   செலுத்தப்பட்ட கொடிய படைக்கலங்கள்;
சுட்டீய- சுடும்படியாக;   நிமிர்ந்த   சுடர்ச் சுடரும்- ஓங்கி
வளர்ந்த   சுடருடைய நெருப்பும்;   கண் தீயும்- (கோபத்தால்)
கண்ணிலிருந்து    தோன்றும் கோபத்தீயும்;   ஒருங்கு கலந்து
எழலால்
- ஒன்றாகச் சேர்ந்து மேல் எழுவதனால்; ஏழ் உலகும்
- ஏழு உலகங்களும்; தீ உள் உற வெந்தன- நெருப்பு உள்புகுந்து
மிகுவதால் வெந்தன.
 

(192)
 

9491.

தேர் ஆர்ப்பு ஒலி, வீரர் தெழிப்பு ஒலியும்,
தார் ஆர்ப்பு ஒலியும், கழல் தாக்கு ஒலியும்,
போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும்,
காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும்.
 

தேர்  ஆர்ப்பு ஒலி- (ஓடும்) தேர்களின்   ஆரவாரமான
ஒலியும்;   வீரர்   தெழிப்பு   ஒலியும்-   போர்   வீரர்கள்
அதட்டுகின்ற   ஒலியும்; தார் ஆர்ப்பு   ஒலியும்- கிண்கிணி
மாலைகளின் ஆரவார   ஒலியும்; கழல் தாக்கு ஒலியும்- வீரக்
கழல்கள் மோதுதலால் எழுகின்ற  ஒலியும்; போர் ஆர் சிலை
நாணி   புடைப்பு   ஒலியும்
-   போருக்கெனப்  பொருந்திய
வில்லின்   நாணினைத்   தெறித்தலால்   எழுகின்ற   ஒலியும்;
காரால் பொலியும் - கருநிறத்தோடு  அழகாக  விளங்குகின்ற;
களிறு ஆர்ப்பு   ஒலியும்- யானைகளின்  ஆரவார  ஒலியும்
(போர்க்களத்திலே கலந்து ஒலித்தன;)
 

(193)
 

இராமபிரான் கணையால் அரக்கர் சேனை அழிதல்
 

9492.

'எல்லாரும் இராவணனே அனையார்;
வெல்லா உலகு இல்லவர்; மெய் வலியார்;
தொல்லார் படை வந்து தொடர்ந்தது' எனா,
நல்லானும் உருத்து, எதிர் நண்ணினனால்.
 

எல்லாரும் இராவணனே அனையார் - எதிரே தோன்றும்
எல்லோருமே (தனித்தனியாக)   இராவணனை   நிகர்த்தவர்கள்;
வெல்லா உலகு இல்லவர்- வெற்றி கொள்ளாத உலகம்   என
எதுவும்