இல்லாதவர்கள் (அதாவது எல்லா உலகங்களையும் வென்றவர்கள்); மெய் வலியார் - உடல் வலிமை கொண்டவர்கள்; எனா- என்று எண்ணி; எதிர் நண்ணினன்- அரக்கருக்கு எதிராக (இராமன்) நெருங்கினான். |
(194) |
9493. | ஊழிக் கனல் போல்பவர் உந்தின போர் |
| ஆழிப் படை அம்பொடும் அற்று அகல, |
| பாழிக் கடை நாள் விடு பல் மழை போல் |
| வாழிச் சுடர் வாளி வழங்கினனால். |
|
ஊழிக்கனல் போல்பவர்- உலக அழிவுக்குரிய பிரளய காலத்து நெருப்பைப் போன்றவராகிய அரக்கர்கள்; உந்தின- செலுத்திய; ஆழிப்படை அம்பொடும் அற்று அகல- சக்கராயுதமும் அம்பும் சிதைந்து ஒழியும்படி; கடைநாள் விடு பல் மழை போல்- யுகாந்தத்தில் (உலக இறுதிநாளில்) பெய்யும் பெருமழை போல; பாழி- வலிமைமிக்க; சுடர் வாளி - ஒளி பொருந்திய அம்புகளை; வழங்கினன்- இராமபிரான் எய்தான். |
வாழி, ஆல் - அசைகள். |
(195) |
9494. | சூரோடு தொடர்ந்த சுடர்க் கணைதான் |
| தாரோடு அகலங்கள் தடிந்திடலும் |
| தேரோடு மடிந்தனர், செங் கதிரோன் |
| ஊரோடு மறிந்தனன் ஒத்து, உரவோர். |
|
சூரோடு தொடர்ந்த- கொடுமையைப் பரப்பிக்கொண்டு வந்த; சுடர்க் கணை- ஒளி கொண்ட (இராம) பாணங்கள்; தாரோடு அகலங்கள் தடிந்திடலும்- மலைகளோடு அவற்றை அணிந்த மார்புகளை அறுத்திடலும்; செங்கதிரோன்- சூரியன்; ஊரோடு மறிந்தனன் ஒத்து- தன்னைச் சூழ்ந்த ஊர்கோளோடு விழுந்தவனைப் போல; உரவோர்- வலிய அரக்கர்கள்; தேரோடு மடிந்தனர் - தாங்கள் ஏறி வந்த தேரோடு மடிந்தார்கள். |
(196) |
9495. | கொல்லோடு சுடர்க் கணை கூற்றின் நிணப் |
| பல்லோடு தொடர்ந்தன பாய்தலினால், |
| செல்லோடு எழு மா முகில் சிந்தினபோல், |
| வில்லோடும் விழுந்த, மிடல் கரமே. |