கொல்லோடு சுடர்க்கணை- கொல்லுதல் தொழிலோடு கூடிய ஒளிமிக்க அம்புகள்; கூற்றின்- யமனுடைய; நிணப் பல்லோடு - கொழுப்புத் தசை படிந்த பல்லோடு; தொடர்ந்தன பாய்தலினால் - தொடர்ந்து பாய்வதால்; மிடல் கரம்- அரக்கரின் வலிமை வாய்ந்த கைகள்; செல்லோடு எழு- இடி மின்னலோடு எழுகின்ற; மாமுகில்- பெரிய மேகங்கள்; சிந்தின போல் - சிந்தியதைப் போல; வில்லோடும் விழுந்த- பிடித்திருந்த வில்லோடு விழுந்தன. |
செல் - (இங்கே) மின்னல். |
(197) |
9496. | செம்போடு உதிரத் திரை ஆழியின்வாய் - |
| வெம்பு ஓடு அரவக் குலம் மேல் நிமிரும் |
| கொம்போடும் விழுந்தன ஒத்த - குறைந்து, |
| அம்போடும் விழுந்த அடல் கரமே. |
|
குறைந்து அம்போடும் விழுந்த- துணிக்கப்பட்டு அம்போடு விழுந்த; அடல் கரம்- வலிய கைகள்; செம்போடு உதிரத் திரை ஆழியின் வாய்- சிவந்த நிறத்தோடு குருதியாகிய அலை கடலிலே; மேல் நிமிரும் - மேல் நோக்கி வளர்கின்ற; கொம்போடும் விழுந்தன - மரக்கிளைகளோடு விழுகின்றனவாகிய; வெம்பு ஓடு அரவக்குலம் ஒத்த- சினங்கொண்டு ஓடும் பாம்புக் கூட்டங்களை ஒத்தன. |
(198) |
9497. | முன் ஓடு உதிரப் புனல், மூதுலகைப் |
| பின் ஓடி வளைந்த பெருங் கடல்வாய் |
| மின்னோடும் விழுந்தன மேகம் என, |
| பொன் ஓடை நெடுங் கரி புக்கனவால். |
|
மூதுலகைப் பின் ஓடி வளைந்த பெருங் கடல்வாய்- பழமையான உலகத்தைச் சூழ்ந்து வளைத்துக்கொண்ட கடலிலே; மின்னோடும் - மின்னலோடும்; விழுந்தன மேகம் என- விழுந்தனவாகிய மேகம் போல; முன் ஓடும் உதிரப் புனல்- முற்பட்டுப் பாய்கின்ற குருதி வெள்ளத்திலே; பொன் ஓடை நெடுங் கரி புக்கன- பொன்மயமான நெற்றிப்பட்டம் சூட்டப்பெற்ற பெரிய யானைகள் புகுந்தன. |
ஆல் : அசை. |
(199) |