பக்கம் எண் :

18யுத்த காண்டம் 

தலையும் ஆர் உயிரும் கொண்டார்- குற்றமற்ற என் மகன்
தலையையும் அரிய உயிரையும் கொண்டவர்; அவர் உடலோடும்
தங்க
- தமது  உடலோடும்  (இன்னும்  உயிர்விடாமல்)  தங்கி
இருக்க; புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும்
போலும்
- இழிவுடையவனாகிய யான் உயிர் சுமந்திருக்கின்றேன் 
போலும்! போலும்!
 

மாதிரம் - திசை, மறு - குற்றம், போலும் - ஒப்பில் போலி; 
உரையசைப் பொருளில் வந்தது. 
 

(35)
 

9221.

'எரி உண அளகை மூதூர், இந்திரன் இருக்கை 

எல்லாம்

பொரி உண, உலகம் மூன்றும் பொது அறப் 

புரந்தேன் போலாம்!

அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை 

யாக்கை

நரி உணக் கண்டேன்; ஊணின், நாய் உணும் 

உணவு நன்றால்!

 

அளகை மூதூர் எரிஉண- குபேரனுக்கு உரிமையான அளகை 
என்னும்  பழமையான  ஊர்  எரியுண்ணவும்;  இந்திரன் இருக்கை 
எல்லாம் பொரி உண
- இந்திரன் இருப்பிடமாகிய அமராவதி தீயில்
பொரிந்து  போகவும்  செய்து;  உலகம்  மூன்றும் பொது அறப்
புரந்தேன் போலாம்
- உலகம் மூன்றும் பிறர்க்கும் பொது என்பது 
இல்லாமல் (எனக்கே உரிமையாக்கிக்) காப்பாற்றினேன் போலும்! அரி 
உணும்  அலங்கல்  மௌலி  இழந்த  என் மதலை யாக்கை

வண்டுகள் தேனை உண்கின்ற மாலையை அணிந்த தலையை இழந்த 
என் புதல்வனது உடம்பை; நரி உணக் கண்டேன்; ஊணின் நாய் 
உணும்  உணவு  நன்றால்
- நரி  உண்ணக்  கண்டேனாகிய யான் 
உண்ணும்  உணவைக்  காட்டிலும்  (தான் கக்கியதையே உண்கின்ற) 
நாய் உண்ணும் (எச்சில்) உணவு சிறந்ததாகும். 
 

(36)
 

9222.

'பூண்டு, ஒரு பகைமேல் புக்கு, என் புத்திரனோடும் 

போனார்

மீண்டிலர் விளிந்து வீழ்ந்தார்; விரதியர் இருவரோடும்