பக்கம் எண் :

180யுத்த காண்டம் 

9498.

மற வெற்றி அரக்கர் வலக் கையொடும்
நறவக் குருதிக் கடல் வீழ் நகை வாள்
சுறவு ஒத்தன; மீது துடித்து எழலால்
இறவு ஒத்தன, வாவும் இனப் பரியே.
 

மற வெற்றி  அரக்கர் -   வீர வெற்றி   (பெற்றுவந்த)
அரக்கரின்; வலக்கையொடும் - வலப்புறக் கையோடு; நறவக்
குருதிக் கடல்
- மணம் கொண்ட இரத்தக் கடலிலே; வீழ்-
வீழ்கின்ற; நகை  வாள்-  ஒளியுடன் கூடிய வாள்கள்; சுறவு
ஒத்தன
- சுறா மீன்களைப்   போன்றிருந்தன; வாவும் இனப்
பரி
- தாவிச் செல்லும், கூட்டமான குதிரைகள்; மீது துடித்து
எழலால்
- மேலே துடித்து எழுவதால்; இறவு ஒத்தன- இறால்
மீன்களைப் போல் இருந்தன.
  

(200)
 

9499.

தாமச் சுடர் வாளி தடிந்து அகல,
பாமக் குருதிப் படிகின்ற படைச்
சேமப் படு கேடகம், மால் கடல் சேர்
ஆமைக் குலம் ஒத்தன அத்தனையால்!
 

தாமச்சுடர் வாளி- பேரொளி வீசும் அம்புகளால்; தடிந்து
அகல
- துணிபட்டு விழுவதால்; பாமக் குருதி படிகின்ற-
பரவிய குருதியில் படிகின்ற; படைச் சேமப் படர் கேடகம்-
படையைப் பாதுகாத்திடும்   வீரர்கள் அணிந்த   கேடயங்கள்;
மால் கடல் சேர் - பெரிய கடலைச் சேர்ந்த; ஆமைக்குலம்
அத்தனை ஒத்தன
- ஆமைக் கூட்டம் எத்தனை உண்டோ
அத்தனையையும் ஒத்தன.
  

(201)
 

9500.

காம்போடு பதாகைகள் கார், உதிரப்
பாம்போடு கடல் படிவுற்றனவால் -
வாம் போர் நெடு வாடை மலைந்து அகல,
கூம்போடு உயர் பாய்கள் குறைந்தனபோல்.
 

வாம் போர் நெடு வாடை மலைந்து- தாவும் போரிலே நெடிய
வாடையால் தாக்கப்பட்ட;  கலம்- மரக்கலம்;   கூம்போடு உயர்
பாய்கள்
- கூம்பு   என்னும்   மரத்திலே  கட்டப்பட்ட  பாய்கள்;
குறைந்தன போல்- சிதைவுற்றனபோல்; காம்போடு பதாகைகள்
கார்
- காம்போடு கொடிகள் சுமந்த முகில் போன்ற யானைகள்;