பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்181

உதிரப்   பாம்போடு   கடல்- இரத்தமாகிய   பரவியோடும்
கடலிலே; படிவுற்றன- படிந்தன.
 

(202)
 

9501.

மண்டப் படு சோரியின் வாரியின் வீழ்
கண்டத் தொகை கவ்விய காலொடு தோள்
முண்டத் திரி தண்டின் முரட்டு ஒருவன்
துண்டச் சுறவு ஒத்த, துடித்தனவால்.
 

மண்டப்படு சோரியின் வாரியின்- பெருகி வருகின்ற குருதி
வெள்ளத்திலே; வீழ்- துண்டிக்கப்பட்டு விழுந்துவிட்ட; கண்டத்
தொகை    கவ்விய காலொடு தோள்
-    சதைத்துண்டுகள்
மிகுந்தனவாய்க்    கவ்வப்பட்ட    கால்களும்    தோள்களும்;
முண்ட(க)த் திரி தண்டின்    -    தாமரையின்    திரிக்கப்பட்ட
தண்டினைப் போல; முரட்டு ஒருவன் துண்டச்சுறவு- முரடான ஒரு
வலிய  சதைப்   பிண்டமாகவுள்ள    சுறாமீன்களை;   ஒத்தன-
ஒப்புடையனவாகி; துடித்தன-.
 

(203)
 

9502.

தெளிவுற்ற பளிங்கு உறு சில்லிகொள் தேர்
விளிவுற்றுக, வேறுற வீழ்வனதாம்,
அளி முற்றிய சோரியின் வாரியின் ஆழ்
ஒளி முற்றிய திங்களை ஒத்துளவால்.
 

தெளிவுற்ற பளிங்கு   உறு சில்லி   கொள் தேர்-   ஒளித்
தெளிவு  கொண்ட   பளிங்கு   போன்ற  சக்கரங்களைக் கொண்ட
தேர்கள்; விளிவுற்று   உக-   அழிந்து சிதறுவதால்; வேறு உற
வீழ்வனதாம்
- தனித்தனியே   விழுகின்ற   அந்தச்   சக்கரங்கள்;
அளி முற்றிய- அம்புகள்   நிரம்பிக் காணப்படுகின்ற; சோரியின்
வாரியின்
- குருதிக் கடலிலே;  ஆழ்- அமிழ்கின்ற; ஒளி முற்றிய
திங்களை   ஒத்தன
-   ஒளி    நிறைவுற்ற சந்திரனைப்   போல்
காணப்பட்டன.
 

(204)
 

9503.

நிலை கோடல் இல் வென்றி அரக்கரை நேர்
கொலை கோடலின், மன் குறி கோளுறுமேல்
சிலை கோடியதோறும் சிரத் திரள் வன்
மலை கோடியின் மேலும் மறிந்திடுமால்.*
 

நிலை கோடல் இல் வென்றி- நிலைகொள்ளுதல் இல்லாத
வெற்றியை உடைய; அரக்கரை- அரக்கர்களை; நேர் கொலை