பக்கம் எண் :

182யுத்த காண்டம் 

கோடலின்- நேராக எதிர்த்துக் கொலை செய்வதில்;   மன்-
தலைவனாகிய       இராமன்;    குறிகோள்    உறுமேல்-
குறிக்கொள்வானாதலின்; சிலை கோடியதோறும் - இராமனின்
வில் வளையும் போதெல்லாம்;   சிரத்திரள் வன்  மலை-
அரக்கர் தலைகளின் கூட்டமாகிய மலைத் திரள்;   கோடியின்
மேலும் மறிந்திடும்
- கோடிக்குமேல் விழும்.
 

(205)
 

9504.

திண் மார்பின்மிசைச் செறி சாலிகையின் -
கண், வாளி கடைச் சிறை காண நுழைந்து,
எண் வாய் உற மொய்த்தன, இன் நறை உற்று
உண் வாய் வரி வண்டுஇனம் ஒத்தனவால்.
 

திண் மார்பின் மிசை- திண்ணிய   மார்பின்மீது;   செறி -
செறிந்துள்ள; சாலிகையின்   கண்-    கவசத்திலே;   வாளி -
அம்பினது;   கடைச்   சிறை- இறுதிப் பகுதியாகிய   சிறகுகள்;
காண நுழைந்து- (தைத்தபிறகும்   வெளியே)    காணும்படியாக
உட்புகுந்து; எண் வாய் அற மொய்த்தன- (காலி இடம் உண்டா
என) எண்ணுதற்கு இடம் அற்றுப் போகும்படியாக மொய்த்தவை;
இன் நறை உற்று- இனிய தேனடையினை அடைந்து; உண் வாய்-
அதனை உண்ணும் வாயினை உடைய; வரி வண்டினம் ஒத்தன-
அழகிய வண்டுகளின் கூட்டத்தைப் போன்று இருந்தன.
 

(206)
 

திகைப்பூட்டும் வகையில் இராமன் சாரி திரிதல்
 

9505.

பாறு ஆடு களத்து, ஒருவன், பகலின்
கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே
நூறு ஆயின யோசனை, நூழில்களம்
மாறாது உழல் சாரிகை வந்தனனால்.
 

பாறு    ஆடு    களத்து    -    பருந்துகள்   பறக்கின்ற
போர்க்களத்தில்; பகலின் கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே
- பகற்    பொழுதின்      நான்கில்    ஒரு பங்காகிய    காலப்
பகுதியிலே; நூறு ஆகிய யோசனை- நூறு யோசனைப் பரப்பினதாக
இருந்த; நூழில் களம்  -    பகைவரைக் கொன்று   குவிப்பதற்கு
உரிய களத்திடையே; ஒருவன்- தனி ஒருவனாகிய    இராமபிரான்;
மாறாது- பிறழ்ச்சி   இல்லாமல்;   உழல்   சாரிகை வந்தனன்-
சுழலும் சாரிகை திரிந்தான்.
 

(207)