இரவு அன்று இது- (இது நிசாசரராகிய நமக்கு ஏற்ற) இரவு அன்று இது; ஓர் பகல்- பகல் நேரமாகும்; என்பர்கள்- என்று தமக்குள் சொல்லிக்கொள்வார்கள்; ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார்- தங்கள் அனைவரையும் எதிர்த்துப் போர் செய்பவன் ஒருவன்தான் என்று கருதும் உணர்ச்சி அற்றவர்களாய்; கரவு அன்று இது- இது வஞ்சனைப் போர் அன்று; இராமர் கணக்கு இலர்- எத்தனை இராமர்கள் என்று அளவிட முடியாத அளவுக்கு இராமர்கள் பலராவர்; பரவை மணலின் பலர் என்பார்கள் - கடல் மணலை விட அதிகமானவர்கள் இராமர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். |
(210) |
9509. | ஒருவன் ஒருவன் மலைபோல் உயர்வோன்; |
| ஒருவன் படை வெள்ளம் ஓர் ஆயிரமே; |
| ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால், |
| ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ?* |
|
ஒருவன் ஒருவன் மலைபோல் உயர்வோன்- அரக்கர் சேனையில் உள்ள ஒவ்வொருவனும் மலைபோலப் பெரிய உருவம் உடையவன்; ஒருவன் படை ஒப்பற்ற ஒருவனாகிய இராவணன் கொண்ட படையோ வெள்ளம் ஓர் ஆயிரமே- ஓர் ஆயிர வெள்ளமாகும்; ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால் - ஓர் அரக்கன் மற்றோர் அரக்கனின் உயிரை உண்டான் என்பதல்லாமல்; ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ- இராமனாகிய ஒருவன் உயிரை அவர் கொண்டனர் என உண்டா? (இல்லை) |
(211) |
9510. | தேர்மேல் உளர்; மாவொடு செந் தறுகண் |
| கார்மேல் உளர்; மா கடல்மேல் உளர்; இப் |
| பார்மேல் உளர்; உம்பர் பரந்து உளரால் - |
| போர்மேலும் இராமர் புகுந்து அடர்வார். |
|
இராமர்... தேர்மேல் உளர்- தேரின்மேல் இருக்கிறார்; மாவொடு- குதிரையோடு; செந்தறு கண் கார்மேல் உளர்- செந்நிறங்கொண்டு அழிக்கின்ற கண்ணினையுடைய கரிய மேகமனைய யானைமேல் இருக்கிறார்; மா கடல்மேல் உளர்- பெரிய கடல்மேல் இருக்கிறார்; இப் பார் மேல் உளர்- இந்த |