பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்185

நிலத்தின்மேல் இருக்கிறார்; உம்பர் பரந்து உளர் - வானத்தில்
பரவி இருக்கிறார்; போர்மேலும் புகுந்து- (இத்தனை இடத்தில்
இருப்பதோடு) இந்தப் போரிலும் நுழைந்து தாக்குவார்; (தொடரும்)
 

(212)
 

9511.

என்னும்படி, எங்கணும் எங்கணுமாய்த்
துன்னும்; சுழலும்; திரியும்; சுடரும்;
பின்னும், அருகும், உடலும், பிரியான் -
மன்னன் மகன்! வீரர் மயங்கினரால்.
 

என்னும்படி- என்று  சொல்லும்படியாக; மன்னன்  மகன்-
தசரதன் மகனாகிய   இராமன்;   எங்கணும்   எங்கணுமாய்-
எங்கெங்குமாகி;   துன்னும்   -   நெருங்குவான்;    சுழலும்-
சுற்றுவான்; திரியும்- அலைவான்; சுடரும்- ஒளிர்வான்; பின்னும்
-  பின்புறத்திலும்;  அருகும்   -   பக்கத்திலும்; உடலும்   -
உடலிலும்; பிரியான்  -  பொருதலை விட்டுப் பிரியான்;  வீரர்
மயங்கினார்
- (இந்த நிலை கண்டு) அரக்க வீரர் கலங்கினர்.
 

(213)
 

அறுசீர்ச்சந்த விருத்தம்
 

இராமன் வில் திறம்
 

9512.

படு மத கரி, பரி, சிந்தின; பனி வரை இரதம்

அவிந்தன;

விடு படை திசைகள் பிளந்தன; விரி கடல் அளறது

எழுந்தன;

அடு புலி அவுணர்தம் மங்கையர் அலர் விழி

அருவிகள் சிந்தின;-

கடுமணி நெடியவன் வெஞ்சிலை, 'கணகண,

கணகண' எனும்தொறும்.

 

நெடியவன் வெஞ்சிலை- இராமபிரான் கொடிய   வில்லில்
உள்ள; கடுமணி- கடுமையான ஓசையை எழுப்பும் மணிகள்; கண
கண கண கண எனும்தொறும்
  -  கண கண கணகணவென்று
ஓசை செய்யும்போதெல்லாம்; மதம்  படு கரி, பரி    சிந்தின-
மதம் பொழியும் யானைகளும் குதிரைகளும் அழிந்தன; பனி வரை
இரதம் அவிந்தன
- பனி படியும் மலைபோல் உயர்ந்த  தேர்கள்
அழிந்தன; விடு   படை  திசைகள்   பிளந்தன  -  இராமன்
விடுக்கின்ற கணைகள் திசைகளைப் பிளந்தன; விரி கடல் அளறு
(அது)