எழுந்தன- அகன்ற கடலிலே சேறுகள் எழுந்தன; அடுபுலி அவுணர்தம்- கொல்லும் புலிபோல்வராகிய அரக்கர்களின்; மங்கையர் அலர் விழி - பெண்டிரின் மலர்ந்த விழிகளில்; அருவிகள் சிந்தின- கண்ணீர் அருவிகளைச் சிந்தின. |
(214) |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
9513. | ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு |
| கோடி; |
| சேனை காவலர் ஆயிரம் பேர் படின், கவந்தம் ஒன்று |
| எழுந்தாடும்; |
| கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின் |
| மணி கணில்என்னும் |
| ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது |
| அன்றே.* |
|
ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி சேனை காவலர், ஆயிரம் பேர் படின்- ஆயிரம் யானைகளும் பதினாயிரம் தேர்களும், கொலை வல்லனவாகிய ஒரு கோடி குதிரைகளும் ஆயிரம் சேனைத் தலைவர்களும் இறந்து விழுந்தால்; கவந்தம் ஒன்று எழுந்து ஆடும்- ஒரு கவந்தம் எழுந்து கூத்தாடும்; கானம்- சுடலையிலே; ஆயிரம் கவந்தம் நின்று ஆடின்- ஆயிரம் கவந்தங்கள் ஆடினால்; கவின் மணி கணின் என்னும்- (இராமன் வில்லில் கட்டிய) அழகிய மணி ஒரு தடவை கணின் என ஒலிக்கும்; அன்று- போர் நடந்த அந்த நாளில்; ஏனை அம் மணி - அந்த (வில்) மணி; ஏழரை நாழிகை இனிது ஆடியது - ஏழரை நாழிகை நேரம் ஆடியது (ஆடியபோதெல்லாம் மணி ஒலித்தது) |
போர்க்களத்தில் தன் வில்லாற்றலால் அழித்த திறம் கூறப்பட்டது. |
(215) |
(வேறு) |
9514. | ஊன் ஏறு படைக் கை வீரர் எதிர் எதிர் |
| ஊரும்தோறும் |
| கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் |
| கொட்பால் |