| வான் ஏறினார்கள் தேரும், மலைகின்ற வயவர் |
| தேரும் |
| தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் - தனி ஏறு |
| அன்னான். |
|
தனி ஏறு அன்னான்- ஒப்பற்ற சிங்க ஏறு போன்றவனாகிய இராமன்; ஊன் ஏறு படைக்கை வீரர் எதிர் எதிர் ஊரும் தோறும்- தசை ஏறியுள்ள போர்க்கருவியைக் கையில் கொண்ட அரக்க வீரர்கள் எதிர்த்து எதிரில் ஊர்ந்து வரும்பொழுதெல்லாம்; கூன் ஏறு சிலையும் தானும் - வளைவு கொண்ட வில்லும் தானுமாக; குதிக்கின்ற கடுப்பின் கொட்பால்- குதிக்கின்ற விரைவான சுழற்சியால்; வான் ஏறினார்கள் தேரும்- போரிலே வீழ்ந்து வீரசொர்க்கம் அடைந்த அரக்கரின் தேர்களையும்; மலைகின்ற வயவர் தேரும் - (இன்னும் சாகாமல்) தன்னோடு போரிடுகின்ற அரக்க வீரர்களின் தேர்களையும்; தான் ஏறி வந்த தேரே ஆக்கினான்- தான் இயங்கும் நிலம் என்ற தேராகவே ஆக்கினான். |
இராமனுக்குத் தேர் இல்லை என்பதையும் அவன் தரையிலேயே இயங்கிப் போர் செய்தான் என்பதையும் நினைவிலே கொண்டு இந்தப் பாட்டின் பொருளை உணரவேண்டும். |
(216) |
9515. | காய் அருஞ் சிலை ஒன்றேனும், கணைப் புட்டில் |
| ஒன்றதேனும், |
| தூய் எழு பகழி மாரி மழைத் துளித் தொகையின் |
| மேல; |
| ஆயிரம் கைகள் செய்த செய்தன, அமலன் செங் கை |
| ஆயிரம் கையும் கூடி, இரண்டு கை ஆனது |
| அன்றே! |
|
காய் இருஞ்சிலை ஒன்றேனும் - பகைவரைச் சினக்கின்ற பெரிய வில் ஒன்றே எனினும்; கணைப் புட்டில் ஒன்றதேனும்- அம்பறாத் தூணியும் ஒன்றுதான் என்றாலும்; தூய் எழு பகழி மாரி- எங்கெங்கும் தூவிப் பெருகுகின்ற அம்பு மழை; மழைத் துளித் தொகையின் மேல- மழைத் துளிகளின் எண்ணிக்கைக்கு மேலாக; அமலன் செங்கை- குற்றமற்றவனாகிய இராமனின் செம்மைக் கைகள்; ஆயிரம் கைகள் செய்த செய்தன- ஆயிரம் கைகள் கூடிச் செய்த செயல்களைச் செய்தன; ஆயிரம் கைகள் |