பக்கம் எண் :

188யுத்த காண்டம் 

கூடி  இரண்டு கை  ஆனது அன்றே- (திருமாலின்)   ஆயிரம்
கைகளும் கூடி    (இராமபிரானின்) இரண்டு   கைகள்   ஆயின
அல்லவோ!
 

இராமன் திருமாலே என்பதை மனங்கொண்டது  இச்செய்யுளின்
கற்பனை. ஆயிரங்கை கொண்ட பரமனே இரண்டு  கை இராமனாக
வந்தான் என்பது.
 

(217)
 

9516.

பொய்; ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு

இது அன்றால்;

மெய்யுற உணர்ந்தோம்; வெள்ளம் ஆயிரம் மிடைந்த

சேனை

செய்யுறு வினையம் எல்லாம் ஒரு முகம் தெரிவது

உண்டே?

அய் - இருநூறும் அல்ல; அனந்தம் ஆம் முகங்கள்

அம்மா!

 

ஒரு முகத்தன் ஆகி- ஒரே முகம் உடையவனாய்; மனிதன்
ஆம் புணர்ப்பு இது அன்று
  -   இது மனிதனாகக்   காணும்
தோற்றம் அன்று; பொய்- (நாம் காணும் இத்தோற்றம்) பொய்யே;
மெய்யுற உணர்ந்தோம்   -   இந்த   மெய்யை    மிகுதியாக
உணர்ந்துவிட்டோம்; வெள்ளம் ஆயிரம் மிடைந்த   சேனை-
ஆயிர வெள்ளம் அளவுக்குச் செறிந்துள்ள அரக்கர் சேனையானது;
செய்யுறு வினையம் எல்லாம்  -    செய்கின்ற    (போர்ச்)
செயலையெல்லாம்; ஒரு முகம் தெரிவது உண்டோ- ஒரே முகம்
கொண்டவனால்      தெரிந்து       கொள்ள      முடியுமா!
(முடிந்திருக்கிறதே!) அய் இரு நூறும் அல்ல- (இவனுக்கு உரிய
உண்மையான முகங்கள்) ஆயிரம் என்பதும்    உண்மை அன்று;
முகங்கள் அனந்தம் ஆம்  -   (உண்மையில்    இவனுக்குரிய
முகங்களுக்கு முடிவே இல்லை.)
 

அம்மா - வியப்பு.
 

(218)
 

9517.

கண்ணுதல் - பரமன்தானும், நான்முகக் கடவுள்தானும்

'எண்ணுதும், தொடர எய்த கோல்' என,

எண்ணலுற்றார்,

பண்ணையால் பகுக்க மாட்டார், தனித் தனி

பார்க்கலுற்றார்

'ஒண்ணுமோ, கணிக்க?' என்பார், உவகையின்

உயர்ந்த தோளார்.*