பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்189

கண்ணுதல் பரமன் தானும்- கண்ணை நெற்றியில் கொண்ட,
பரமனாகிய சிவனும்; நான்முகக் கடவுள்தானும்- நான்முகனாகிய
கடவுளும்; தொடர எய்த கோல் எண்ணுதும் என- இராமபிரான்
தொடர்ந்து எய்கின்ற அம்புகளை எண்ணிக் கணக்கிடுவோம் என்று;
எண்ணலுற்றார்- கணக்கிடத் தொடங்கினவர்களாய்; பண்ணையால்
பகுக்க மாட்டார்
- அம்புகள் தொகுதி தொகுதியாய்ப் பாய்தலால்
பிரித்து எண்ண முடியாமல்; உவகையின் உயர்ந்த தோளார்-
மகிழ்ச்சியால் ஓங்கிய தோள்களை உடையவர்களாய்; 'ஒண்ணுமோ
கணிக்க' என்பார்
- கணக்கிட முடியுமோ என்று சொல்லினார்கள்.
 

அம்புகளை எண்ணமுடியாமல் தோற்றாலும் இராமனது வில்லாற்றல்
சிவனுக்கும் நான்முகனுக்கும் மகிழ்ச்சி தந்தது.
 

(219)
 

தேவர்கள் வியந்து புகழ்தல்
 

9518.

'வெள்ளம் ஈர் - ஐந்து நூறே; விடு கணை அவற்றின்

மெய்யே

உள்ளவாறு உளவாம்' என்று ஓர் உரை கணக்கு

உரைத்துமேனும்,

'கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால்,

கொற்ற

வள்ளலே வழங்கினானோ?' என்றனர், மற்றை

வானோர்.

 

மற்றை    வானோர்- (மேலே     குறிக்கப்பட்ட    சிவன்,
நான்முகன் தவிர      உள்ள) மற்றத் தேவர்கள்; வெள்ளம் ஈர்
ஐந்து நூறே
- அரக்கரின் சேனை ஆயிரம் வெள்ளம் எண்ணிக்கை
கொண்டது; விடுகணை- இராமன் ஏவுகின்ற அம்புகள்; அவற்றின்
மெய்யே உளவாம் என்று
- அந்த எண்ணிக்கையின் அளவாகவே
இருக்கும்   என்று; ஓர் உரை கணக்கு   உரைத்தமேனும்- ஒரு
பேச்சுக்கு அப்படி   ஒரு   கணக்குச்   சொல்லுவோம் என்றாலும்;
கொள்ளை ஓர்    உருவை- கூடிக் கிடக்கும்   வீரர் கூட்டத்தில்
ஓர் உடம்பினை; நூறு கொண்டன பல- நூறு துண்டுகளாக ஆக்கிய
கணைகள்  பலவாகும்;   கொற்ற  வள்ளலே வழங்கினானோ-
வெற்றிக்கு    உரிய இராமன் தான் அத்துணை    அம்புகளையும்
ஏவியிருப்பானோ; என்றனர்- என்று (வியந்து புகழ்ந்து) கூறினர்.
 

(220)