| ஆண்டு உள குரங்கும், ஒன்றும் அமர்க் களத்து, | | ஆரும் இன்னும் | | மாண்டிலர்; இனி மற்று உண்டோ, இராவணன் வீர | | வாழ்க்கை? | | | பூண்டு, ஒரு பகை மேல் புக்கு- போர்க்கோலம் பூண்டு ஒரு பகை மேல் (இலக்குவன் மேல் போர் செய்ய) புகுந்து; என் புத்திரனோடும் போனார் - என் மகனோடும் (போர்க்களம்) போனவர்களெல்லாம்; மீண்டிலர் விளிந்து வீழ்ந்தார்- மீளாதவர்களால் இறந்து வீழ்ந்தார்கள்; விரதியர் இருவரோடும் ஆண்டு உள குரங்கும் - தவ விரதம் பூண்ட (இராம இலக்குவராகிய) இருவரோடும் ஆங்கு இருக்கின்ற குரங்கும்; ஒன்றும் அமர்க்களத்து, ஆரும் இன்னும் மாண்டிலர்- பொருந்திய போர்க்களத்தில் யாரும் இன்னும் இறந்திலர்; இராவணன் வீர வாழ்க்கை இனிமற்று உண்டோ?- இராவணனது வீரவாழ்க்கை இனிவேறு உண்டோ? | போர்க்களத்தினின்றும் தப்பியோடிய அரக்கர் உளரேனும், குரங்குகள், மருந்து மலையாலும், தேவர் அருளாலும் அனைத்தும் உயிர்த்தெழுந்தமையை நோக்க இராவணன் தன்னைப் பழித்துக் கூறிக் கொள்ளும் இக்கூற்றின் பொருத்தத்தை உணரலாம். | (37) | | 9223. | கந்தர்ப்பர், இயக்கர், சித்தர், அரக்கர்தம் | | கன்னிமார்கள், | | சிந்து ஒக்கும் சொல்லினார், உன் தேவியர், திருவின் | | நல்லார், | | வந்து உற்று, 'எம் கணவன்தன்னைக் காட்டு' என்று, | | மருங்கில் வீழ்ந்தால், | | அந்து ஒக்க அரற்றவோ, நான் கூற்றையும் ஆடல் | | கொண்டேன்!* | | | கந்தர்ப்பர், இயக்கர், சித்தர் அரக்கர் தம் கன்னிமார்கள் - கந்தருவர், இயக்கர், சித்தர் அரக்கர் என்பார் தம் புதல்வியராய்; சிந்து ஒக்கும் சொல்லினார்- 'சிந்து' என்னும் பண்ணினை ஒத்துப் பேசும் சொல்லினிமையை உடையவர்களும்; திருவின் நல்லார் உன் தேவியர் வந்து உற்று- திருமகளினும் அழகு மிக்கவர்களுமாகிய உன் மனைவிமார்கள் வந்து அடைந்து; 'எம் கணவன் |
|
|
|