9519. | 'குடைக்கு எலாம், கொடிகட்கு எல்லாம், கொண்டன |
| குவிந்த கொற்றப் |
| படைக்கு எலாம், பகழிக்கு எல்லாம், யானை தேர் |
| பரிமா ஆதி |
| கடைக்கு எலாம், துரந்த வாளி கணித்ததற்கு |
| அளவை காட்டி |
| அடைக்கலாம் அறிஞர் யாரே?' என்றனர் முனிவர், |
| அப்பால். |
|
அப்பால் முனிவர்- தள்ளி அப்பால் நின்ற முனிவர்கள்; குடைக்கு எலாம்- எல்லாம் குடைகளுக்கும்; கொடிகட்கு எல்லாம் - எல்லாக் கொடிகளுக்கும்; கொண்டன- அவற்றைப் பற்றிக் கொண்டிருந்தனவும்; குவிந்த - குவிந்தனவுமாகிய; கொற்றப் படைக்கு எலாம்- வெற்றி (நாடும்) படைக்கலங்களுக்கெல்லாம்; பகழிக்கு எல்லாம்- தன்னைத் தாக்க வருகின்ற அம்புகளுக்கெல்லாம்; யானை தேர் பரிமா ஆதி - யானைகள், தேர்கள், குதிரைகள் முதலான; கடைக்கு எலாம் - எல்லாவற்றிற்குமாக; துரந்த வாளி - இராமன் செலுத்திய அம்புகளை; கணித்து- அளவிட்டு; அதற்கு அளவை காட்டி- அப்படி அளவிட்டதற்கு அளவு இதுதான் என்று காட்டி; அடைக்கலாம் அறிஞர் யாரே?- முடிக்கக்கூடிய அறிஞர்கள் யார் இருக்கிறார்கள்? (இல்லை) என்றனர். |
(221) |
9520. | கண்டத்தும் கீழும் மேலும், கபாலத்தும், கடக்கல் |
| உற்ற, |
| சண்டப் போர் அரக்கர்தம்மைத் தொடர்ந்து, கோல் |
| புணரும் தன்மை - |
| பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களைப் பிரமன் |
| தந்த |
| அண்டத்தை நிறையப் பெய்து குலுக்கியது அனைய |
| ஆன. |
|
கடக்கல் உற்ற- கடந்து போகின்ற; சண்டப்போர் அரக்கர் தம்மை - கொடுமையாகப் போர் செய்யும் அரக்கர்களை; தொடர்ந்து- பின் தொடர்ந்து; கண்டத்தும் - அவர்களுடைய கழுத்திலும்; கீழும் மேலும்- அவர்தம் உடம்பின் கீழும் மேலும்; கபாலத்தும்- தலை ஒட்டிலும்; கோல் புணரும் தன்மை- அம்புகள் |