பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்191

சென்று சேர்ந்த  தன்மை; பிண்டத்தில் கருவாம் தன் பேர்
உருக்களை
  -  பிண்டத்திலே    கருவாகியுள்ள தன்   பெரிய
படைப்புகளை;  அண்டத்தை  நிறையப் பெய்து- அண்டம்
நிறையும்படியாக இட்டு; குலுக்கியது அனைய ஆன- குலுக்கப்
பட்டவை போல அமைந்தன.
 

பல இடங்களிலும் கடந்து போகின்ற அரக்கர்களை கழுத்து,
மேல் கீழ் என்று   எல்லா   இடங்களிலும் அம்புகள் சென்று
கலக்கின்றன. பிண்டத்தில்   கருவாகிய   உருக்களைப் பிரமன்
பேரண்டத்திலே நிறைய இட்டு   நிரப்பிய தன்மை   போல -
அம்புகள்   கருக்கள்; அம்புகள்   கீழ் மேல் இடை எங்கும்
அரக்கர்களோடு   கலந்து    நிரம்பியுள்ளவை. கருக்களாகிய
உருக்களும் அண்டம் நிறையப் பெய்யப் பெற்றுள்ளன போலும்
எனப் பொருத்துக.
 

(222)
 

பத்துக் கோடி வீரர் மாள, எஞ்சியவர் தெய்வப் படைக்கலங்கள்
கொண்டு தாக்க வருதல்
 

9521.

கோடி ஐ - இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி,

ஓடி ஓர் பக்கம் ஆக, உயிர் இழந்து, உலத்தலோடும்

'வீடி நின்று அழிவது என்னே! விண்ணவர் படைகள்

வீசி,

மூடுதும் இவனை' என்று, யாவரும் மூண்டு

மொய்த்தார்.

 

ஐ இரண்டு கோடி தொக்க- பத்துக் கோடிப் பேராகக் கூடி
நின்ற; படைக்கல மள்ளர்- படைக்கலங்களை ஏந்திய வீரர்கள்;
கூவி  -  ஆரவாரித்து; ஓர்    பக்கம் ஆக ஓடி  - ஒரு
பக்கத்தில் ஓடிச் சென்று;    உயிர் இழந்து உலத்தலோடும்-
உயிரை    இழந்து அழிந்த    நிலையில்; வீடி நின்று அழிவது
என்னே! விண்ணவர் படைகள் வீசி மூடுதும் இவனை என்று
-
வீழ்ச்சி பெற்று    அழிவது    ஏன்?   தேவர்களிடம்    பெற்ற
படைக்கலங்களை எறிந்து இந்த இராமனை முற்றிலுமாக மறைத்து
விடுவோம் (மறைத்து அழித்திடுவோம்) என்று; யாவரும் மூண்டு
மொய்த்தார்
- எஞ்சியிருந்த அரக்கர் எல்லாரும் பொங்கிச்
செறிந்தனர்.
 

(223)
 

தெய்வப் படைகளைத் தெய்வப் படைகளாலேயே இராமன் தடுத்தல்
 

9522.

விண்டுவின் படையே ஆதி வெய்யவன் படை ஈறாக
கொண்டு ஒருங்கு உடனே விட்டார்; குலுங்கியது

அமரர் கூட்டம்;