பக்கம் எண் :

192யுத்த காண்டம் 

அண்டமும் கீழ் மேலாக ஆகியது; அதனை

அண்ணல்

கண்டு, ஒரு முறுவல் காட்டி, அவற்றினை அவற்றால்

காத்தான்.

 

விண்டுவின் படையே ஆதி- திருமால் அஸ்திரம் முதலாக;
வெய்யவன் படை ஈறாக- நெருப்பிறைவன் அஸ்திரம் ஈறாக;
கொண்டு- (பல   தெய்வ அத்திரங்களைக்)    கைக்கொண்டு;
ஒருங்கு உடனே விட்டார்-    ஒன்றாகச் சேர்ந்து விரைவாக
ஏவினார்கள் அமரர்   கூட்டம்   நடுங்கிற்று; அண்டமும் கீழ்
மேலாக ஆகியது
- அண்டமும் கீழே மேலாக நிலை குலைந்தது;
அதனை- அவ்வாறு ஆகிவிட்டதை; அண்ணல்- இராமபிரான்;
கண்டு ஒரு முறுவல்    காட்டி- ஒரு புன்சிரிப்பைக் காட்டி
அவற்றினை அவற்றால் காத்தான்.     அரக்கர் ஏவிய தெய்வப்
படைகளை தெய்வப் படைகளால் தடுத்தான்.
 

(224)
 

9523.

'தான் அவை தொடுத்த போது, தடுப்ப அரிது;

உலகம்தானே

பூ நனி வடவைத் தீயின் புக்கெனப் பொரிந்து

போம்' என்று

ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப அருங் கோடி

அம்பால்

எனையர் தலைகள் எல்லாம் இடியுண்ட மலையின்

இட்டான்.

 

தான் அவை தொடுத்தபோது- தானே அந்தத் தெய்வப்
படைகளைத் தொடுத்தால்; தடுப்ப அரிது- எவராலும் தடுத்து
நிறுத்தல் அரிதாகும்; உலகம் தானே வடவைத் தீயின் பூ நனி
புக்கெனப் பொரிந்துபோம்
- உலகம் வடவை (ஊழிக்கால)
நெருப்பிலே மலர் புகுந்தது போலப் பொரிந்து போகும்; என்று
ஆனது தெரிந்த வள்ளல்
- என்ற அந்த உண்மையைத் தெரிந்த
வள்ளலாகிய இராமன்; அளப்ப அருங்கோடி அம்பால்- அளவிட
முடியாத   கோடிக்கணக்கான அம்புகளால்; ஏனையர் தலைகள்
எல்லாம்  
-  முன்னமே   அழிந்தார்போக     மற்றவர்களின்
தலைகளையெல்லாம்; இடியுண்ட மலையின் இட்டான்- இடியால்
தாக்கப்பட்ட மலை எப்படிச் சரியுமோ அப்படிக் குவித்தான்.