பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்193

அரக்கர்  ஏவிய தெய்வப்   படைகளைத் தடுப்பதற்காகத்
தெய்வப் படைகளைப் பயன்படுத்தினான். அரக்கரை அழிக்கப்
பயன்படுத்த வில்லை.
 

(225)
 

9524.

ஆயிர வெள்ளத்தோரும் அடு களத்து அவிந்து

வீழ்ந்தார்;

மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறைப் பாரம்

நீங்கி;

மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே, வீங்கு ஒலி

வேலைநின்றும்

போய் ஒருங்கு அண்டத்தோடும் கோடி யோசனைகள்

பொங்கி!

 

ஆயிர வெள்ளத்தோடும்- ஆயிர வெள்ளம் அளவினதாகிய
அரக்கர்கள் யாவரும்; அடு களத்து-   கொலைக்   களத்திலே;
அவிந்து  வீழ்ந்தார்- இறந்து    வீழ்ந்தார்கள்;   மா   இரு
ஞாலத்தாள்
-  மிகவும்   பெருமைக்குரிய நில மகள்; தன் வன்
பொறைப்  பாரம் நீங்கி
    -   தன்மீது இதுவரை இருந்துவந்த
கொடிய   சுமையாகிய பாரம் நீங்கப்பெற்று; வீங்கு ஒலி வேலை
நின்றும்
-   பேரொலி செய்யும்   கடலிலிருந்து; ஒருங்கு போய்
- ஒன்றாகச் சென்று; அண்டத்தோடும்-; கோடி யோசனைகள்
பொங்கி
- கோடி யோசனை தூரத்துக்குப் பொங்கி; மீ உயர்ந்து
எழுந்தாள்
- மேலோங்கி எழுந்தார்.
 

(226)
 

தேவர் முதலியோர் துயரம் தீர்ந்து இராமனை வாழ்த்துதல்
 

9525.

'நினைந்தன முடித்தேம்' என்னா, வானவர் துயரம்

நீத்தார்;

'புனைந்தனென் வாகை' என்னா, இந்திரன் உவகை

பூத்தான்;

வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று

உயர்ந்தமாதோ;

அனந்தனும் தலைகள் ஏந்தி, அயாவுயிர்த்து, அவலம்

தீர்ந்தான்.