பக்கம் எண் :

194யுத்த காண்டம் 

நினைந்தன முடித்தோம்   என்று-   நாம் எண்ணியவை
எண்ணியபடியே  முடித்துவிட்டோம் என்று;   வானவர் துயரம்
நீத்தார்
     -      தேவர்கள்    கவலையை    ஒழித்தார்கள்;
புனைந்தனென் வாகை என்னா- (வெற்றி பெற்று) வாகை மாலை
அணிந்தேன் என்று; இந்திரன் உவகை  பூத்தான்-   இந்திரன்
மகிழ்ச்சியால்  மலர்ந்தான்;  வனைந்தன    அல்லா வேதம்-
எவராலும்  செய்யப்படாதனவாகிய வேதங்கள்; வாழ்வு பெற்று
உயர்ந்த
- உயிர் வாழ்வைப் பெற்று உயர்ந்தன.
 

மானிடர் எவராலும் செய்யப்படாதவை வேதங்கள்; 'எழுதாக்
கிளவி' என்பர். அதனை 'வனைந்தன அல்லா வேதம்'  என்றார்.
மாதோ : அசை.
 

(227)
 

9526.

தாய், 'படைத்துடைய செல்வம் ஈக!' என, தம்பிக்கு

ஈந்து,

வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின்

மேவி,

தோய் படைத் தொழிலால் யார்க்கும் துயர்

துடைத்தானை நோக்கி,

வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார்,

வணக்கம் செய்தார்.

 

தாய்- (சிறிய) தாயாகிய கைகேயி; 'படைத்துடைய செல்வம்
ஈக'
- உனக்கு உரியதாக வந்த செல்வத்தைக் கொடுத்துவிடு; என
- என்று சொல்ல; தம்பிக்கு ஈந்து-   தம்பியாகிய   பரதனுக்குத்
தந்துவிட்டு;   வேய்  படைத்துடைய  கானம்-     மூங்கில்கள்
வளர்ந்துள்ள காட்டுக்கு; விண்ணவர் தவத்தின் மேவி- தேவர்கள்
செய்த தவத்தால்   வந்தடைந்து;    தோய் படைத்தொழிலால்-
ஈடுபாடு கொண்ட படைக்கலத்    தொழிலால்; யார்க்கும்   துயர்
துடைத்தானை   நோக்கி
-    எல்லாருடைய       துயரத்தையும்
போக்கியவனைப் பார்த்து; வாய் படைத்துடையார் எல்லாம்- வாய்
படைத்தவர்கள்   எல்லாரும்;  வாழ்த்தினர் வணக்கம் செய்தார்-
வாழ்த்தி வணங்கினர்.
 

வாய் பெற்றார் பெரும் பயன் அடைவது துயர் துடைத்த இராமனை
வாழ்த்தலே   என்ற  கருத்தில்   'வாய்  படைத்துடையார்   எல்லாம்
வாழ்த்தினார்' என்றார்.
 

(228)