9527. | தீ மொய்த்த அனைய செங் கண் அரக்கரை முழுதும் |
| சிந்தி, |
| பூ மொய்த்த கரத்தர் ஆகி விண்ணவர் போற்ற, |
| நின்றான் - |
| பேய் மொய்த்து, நரிகள் ஈண்டி, பெரும் பிணம் |
| பிறங்கித் தோன்றும், |
| ஈமத்துள் தமியன் நின்ற கறை மிடற்று இறைவன் |
| ஒத்தான். |
|
தீ மொய்த்த அனைய செங்கண் அரக்கரை- தீச் செறிந்தது போன்ற சிவந்த கண்கள் கொண்ட அரக்கர்களை; முழுதும் சிந்தி- முற்றாக அழித்து; பூ மொய்த்த கரத்தர் ஆகி - பூ நிறைந்த கைகள் உடையவராய்; விண்ணவர் போற்ற நின்றான் - தேவர்கள் போற்றும் படியாக நின்ற இராமபிரான்; பேய் மொய்த்து - பேய்கள் நிரம்பக் கூடியும்; நரிகள் ஈண்டி- நரிகள் நிறையக் கூடியும்; பெரும் பிணம் பிறங்கித் தோன்றும்- ஏராளமான பிணங்கள் விளங்கத் தோன்றுகின்ற; ஈமத்துள்- சுடுகாட்டில்; தமியன் நின்ற - தனியனாக நின்ற; கறைமிடற்று இறைவன் ஒத்தான்- கறையைக் கழுத்திலே கொண்ட சிவபிரானைப் போல் இருந்தான். |
(229) |
9528. | அண்டம் மாக் களமும், வீந்த அரக்கரே உயிரும் |
| ஆக, |
| கொண்டது ஓர் உருவம்தன்னால், இறுதிநாள் வந்து |
| கூட, |
| மண்டு நாள், மறித்தும் காட்ட, மன்னுயிர் அனைத்தும் |
| வாரி |
| உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான். |
|
அண்டம் மாக் களமும்- இந்த அண்டமே பெரிய களமாகவும்; வீந்த அரக்கரே உயிரும் ஆக- வீழ்ந்து விட்ட அரக்கர்களை உயிர்க் கூட்டங்களாகவும் ஆக; கொண்டது ஓர் உருவம் தன்னால் - மேற்கொண்ட ஒப்பற்ற உருவத்தால்; இறுதி நாள் வந்து கூட மண்டும் நாள்- அழிவுக்காலம் வந்து சேர வரும் கடைநாளிலே; மறித்தும் காட்ட- திரும்பவும் படைத்துக் காட்டுவதற்காகவே; மன்னுயிர் அனைத்தும் வாரி உண்டவன்- |