பக்கம் எண் :

196யுத்த காண்டம் 

நிலைபெற்ற உயிர்கள்   எல்லாவற்றையும் ஒன்றாக   எடுத்து
உண்டவன்; தானே ஆன- தானேயாகிய; தன் ஒரு மூர்த்தி
ஒத்தான்
- தன் ஒப்பற்ற வடிவத்தை நிகர்த்து விளங்கினான்.
 

மண்டுதல்   -   நெருங்குதல். விழுங்கப்பட்ட உயிர்கள்
மீண்டும் வரும் என்பதைப் புலப்படுத்தவே மன் (நிலைபெற்ற)
உயிர் என்றார். விழுங்குவது அழிப்பதற்கு அன்று, மீண்டும்
படைப்பதற்கு என்பதை 'மறித்தும் காட்ட உண்டவன்' என்ற
தொடரால் புலப்படுத்தினார்.
 

(230)
 

இராவணனோடு போர் செய்யும் இலக்குவனிடம் இராமன்
செல்லுதல்
 

9529.

ஆகுலம் துறந்த தேவர் அள்ளினர் சொரிந்த

வெள்ளச்

சேகு அறு மலரும் சாந்தும் செருத் தொழில்

வருத்தம் தீர்க்க,

மா கொலை செய்த வள்ளல், வாள் அமர்க்

களத்தைக் கைவிட்டு

ஏகினன், இளவலோடும் இராவணன் ஏற்ற கைம்மேல்.

 

ஆகுலம் துறந்த தேவர்- துன்பம்    நீங்கிய தேவர்கள்;
அள்ளினர் சொரிந்த- வாரிச் சொரிந்த; வெள்ளச்    சேகு
அறு மலரும்
   -   வெள்ளம் போல்   நிறைந்த   குற்றமற்ற
மலர்களும்; சாந்தும்- சந்தனமும்; செருத்தொழில்  வருத்தம்
தீர்க்க
  -  போர்ச்   செயலினால்   ஏற்பட்ட   துன்பத்தைப்
போக்க; மா கொலை செய்த வள்ளல்- பெருங் கொலைகளைச்
செய்த    வள்ளலாகிய   இராமன்; வாள் அமர்க் களத்தைக்
கைவிட்டு
- வாள் (விளையாடும்)   போர்க் களத்தை   நீங்கிச்
சென்று; இளவலோடும் இராவணன்   ஏற்ற   கைம்மேல்-
தம்பியாகிய   இலக்குவனோடு இராவணன்   எதிர்த்து   நின்ற
இடத்துக்கு; ஏகினன்- போனான்.
 

'மா கொலை செய்த வள்ளல்' என்ற தொடர் சிந்தனைக்கு
உரியது. அரக்கரை அழித்ததைக் 'கொலை' என்ற சொல்லால்
குறித்தார். அது    தீயோரை   அழிக்கும்   அரசர் கடமை
என்பதால். 'கொலையிற்    கொடியாரை   வேந்து  ஒறுத்தல்
பைங்கூழ் களை   கட்டதனோடு   நேர்' (குறள் 550)  என்ற
குறட்பாவையும்     இப்    பெற்றியாரைக்    கண்ணோடிக்
கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ் போன்று
நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச்
சாதி தருமம் என்பதாயிற்று' என்ற பரிமேலழகர்
விளக்கத்தையும் மனத்தில் நினைந்து