பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்197

தெளிவு   காணல்வேண்டும்.   மேலும்   கொலை செய்தவனை
'வள்ளல்' என்ற வளச் சொல்லால் குறித்தமையும் கருதத் தக்கது.
'சாத்திரக்  கருத்துப்படி இறைவனுடைய பஞ்ச  கிருத்தியங்களில்
ஒன்றான சம்ஹாரமும் அருட்செயல் என்றே அழைத்தல் உணர்க'
என்பது ஐயரவர்கள் நூலகப் பதிப்பு விளக்கம்.
 

(231)
 

இனி, மேல் சொல்ல இருப்பவை
 

9530,

இவ் வழி இயன்ற எல்லாம் இயம்பினாம்; இரிந்து

போன

தெவ் ஆழி ஆற்றல் வெற்றிச் சேனையின் செயலும்,

சென்ற

வெவ் வழி அரக்கர் கோமான் செய்கையும், இளைய

வீரன்

எவ்வம் இல் ஆற்றல் போரும், முற்றும் நாம்

இயம்பலுற்றாம்.

 

இவ் வழி- இராமன் மூலபலச் சேனையை எதிர்த்த இடத்தில்;
இயன்ற    எல்லாம் இயம்பினாம்-   நிகழ்ந்தவற்றையெல்லாம்
சொன்னோம்; இரிந்து போன  -  முதலில் அரக்கர் படையைக்
கண்டு அஞ்சி  ஓடிப் போன; தெவ் அழி ஆற்றல்-  பகைவரை
அழிக்கும் ஆற்றல்  மிக்க;   வெற்றிச் சேனையின் செயலும்-
வெற்றி  பெறுவதற்கு   உரிய (குரங்குச்) சேனையின்  செயலையும்;
வெவ்   வழி  அரக்கர்  கோமான்  செய்கையும்-  கொடிய
வழிகளில் செயல்படுகின்ற   அரக்கர்    மன்னனாகிய இராவணன்
செயலையும்; இளைய வீரன் - இளையவனாகிய இலக்குவ வீரனின்;
எவ்வம் இல் ஆற்றல்  போரும்-    குற்றம்  இல்லாத ஆற்றல்
மிக்க போர்ச்   செயலையும்; நாம் முற்றும்   இயம்பலுற்றாம்-
நாங்கள் முழுமையாகச் சொல்லத் தொடங்கினோம்.
 

(232)