பக்கம் எண் :

 வேல் ஏற்ற படலம்199

குரக்குச் சேனை களத்திற்கு மீண்டு வருதல்
 

9531.

'பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர்;

பெயர்ந்து போய், நாம்

விரும்பினம் வாழ்க்கை என்றால், யார் இடை

விலக்கற்பாலார்;

வரும் பழி துடைத்தும்; வானின் வைகுதும், யாமும்'

என்னா,

இருங் கடல் பெயர்ந்தது என்ன, தானையும் மீண்டது

இப்பால்.

 

பெரும்படைத் தலைவர் யாரும் - பெருமையுடைய படையின்
தலைவர்கள்     எல்லாரும்;    பெயர்ந்திலர்   -    நீங்கினர்
அல்லர்;   பெயர்ந்து   போய்  -  படை வீரர் போர்க்களத்தை
விட்டு நீங்கி;  நாம்   விரும்பினம்   வாழ்க்கை என்றால்-
நாம்   மட்டும்   உயிர்  வாழ   விரும்பினாம் என்றால்; இடை
விலக்கற்பாலார்   யார்
   -   இடையில்   நின்று    நம்மைத்
தடுப்பதற்குரியவர்    யார்?;   வரும்   பழி     துடைத்தும்-
(அதனால்) வருகின்ற  பழியைத் துடைப்போம்; யாமும் வானில்
வைகுதும் என்னா
- நாங்களும் துறக்கவுலகில் வாழ்வோம் என்று
உறுதி கொண்டு; இருங்கடல் பெயர்ந்தது என்ன- பெரிய கடல்
நிலை பெயர்ந்து வந்தது போன்று; இப்பால் தானையும் மீண்டது
- இப்பக்கம் வானரப்படையும் மீண்டு வந்தது.
 

(1)
 

இராவணன் போர்க்களம் செல்லுதல்
 

கலித்துறை
 

9532.

சில்லி ஆயிரம், சில் உளைப் பரியொடும் சேர்ந்த,

எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு

இமைக்கும்,

செல்லும் தேர்மிசைச் சென்றனன் - தேவரைத்

தொலைத்த

வில்லும், வெங் கணைப் புட்டிலும், கொற்றமும்,

விளங்க.

 

சில்லி ஆயிரம்- ஆயிரம் சக்கரங்களோடும்; சில் உளைப்
பரியொடும் சேர்ந்த
- சிலவாகிய பிடரி மயிருடைய ஆயிரம்