தன்னைக் காட்டு' என்று மருங்கில் வீழ்ந்தால்- 'எம் கணவனைக் காட்டு' என்று அரற்றிக்கொண்டு என் பக்கத்திலே வீழ்ந்தால்; கூற்றையும் ஆடல் கொண்டேன் நான் அந்து ஒக்க அரற்றவோ?- எமனையும் வெற்றி கொண்ட யான் அப்படியே அவர்களோடு சேர்ந்து (செய்வதறியாது) அரற்றுவேனோ? |
(38) |
| 9224. | 'சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம் |
| மேவி, |
| நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி |
| நீரால், |
| எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி, |
| உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் |
| உலகத்து உள்ளார்?' |
| |
சினத்தொடும் கொற்றம் முற்றி- சினத்தோடு நின்று வெற்றியை முழுமையாக எய்தி; இந்திரன் செல்வம் மேவி - இந்திரனுடைய செல்வத்தை அடைந்து; நினைத்தது முடித்து நின்றேன்- நினைத்ததைச் செய்து முடித்து நின்ற யான்; நேரிழை ஒருத்தி நீரால் - (இப்போது) பொருந்திய அணிகலன்களை அணிந்த (சீதை என்கின்ற) ஒருத்தியின் காரணமாக, (அந்நிலையிழந்து); எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் - எனக்கு நீ செய்யத் தக்க இறுதிக் கடன்களை எல்லாம்; ஏங்கி ஏங்கி உனக்கு நான் செய்வதானேன் - வருந்தி வருந்தி உனக்கு யான் செய்யும் நிலைமையை அடைந்தேன்; என்னின் யார் உலகத்து உள்ளார்?- என்னைவிட இழிந்தவர்கள் இவ்வுலகத்து யாருளர்? |
மகன் இறக்கும் நிலை, சீதை மேல் தான் கொண்ட காதல் என்பதை இராவணன் தனித்துத் துயருறும்போது ஒத்துக் கொள்ளுகின்றமையை இங்கு காணலாம். ''நுந்தைக்கு நீ செயக்கடவன கடன்கள், இரக்கம் உற்று, உனக்கு அவன் செயும்'' (பிரமாத்திர - 67) என்ற இலக்குவனின் கூற்றுக்கு ஏற்ப இப்பாடல் அமைந்திருப்பது காண்க. முதிய தந்தை இறக்க மகன் அவற்கு அந்திமக் கடன்கள் செய்வது இயல்பு. மாறி அமையினும் விதி எனலாம். இங்கு தந்தையின் தவறான காமம் காரணமாக மகன் இறக்க அம்மகனுக்கு அந்தந்தையே ஈமக்கடன் செய்வதாய் இருப்பதால், 'என்னின் யார் உலகத்து உள்ளார்' எனப் புலம்புகின்றான் இராவணன். |
(39) |