பக்கம் எண் :

200யுத்த காண்டம் 

குதிரைகளோடும் சேர்ந்ததும்; எல்லவன் கதிர்    மண்டலம்-
கதிரவன் செங்கதிர் மண்டலத்தோடு; மாறுகொண்டு இமைக்கும்
- ஒப்புமை  பூண்டு  ஒளி   வீசுவதும்; செல்லும் தேர்மிசை -
விரைந்து  போகும்  செலவினையும்    உடைய தேர் மீது  ஏறி;
தேவரைத் தொலைத்த- வானவர்களையும்   அழித்த; வில்லும்
வெங்கணைப் புட்டிலும்
- கொடிய    வில்லும் அம்பு நிறைந்த
அம்பறாத்தூணியும்;  கொற்றமும்     விளங்கச் சென்றனன்-
வீரமும் விளங்க (இராவணன் போர்க்களத்திற்குச்) சென்றான்.
 

(2)
 

9533.

நூறு கோடி தேர், நொறில் பரி நூற்று இரு கோடி,

ஆறுபோல் மத மாகரி ஐ - இரு கோடி

ஏறு கோள் உறு பதாதியும் இவற்று இரட்டி

சீறு கொள் அரிஏறு அனானுடன் அன்று சென்ற.

 

அன்று சீறுகொள் அரிஏறு அனானுடன் - அப்போது சீறுகின்ற
வலிய ஆண் சிங்கம் போன்ற இராவணனுடன்; நூறு   கோடி தேர்-
நூறு கோடி தேர்களும்; இருநூற்றுக் கோடி நொறில் பரி- இருநூறு
கோடி விரைந்து செல்லும் குதிரைகளும்; ஐயிரு கோடி- பத்துக்கோடி;
ஆறுபோல் மதமாகரி-  ஆற்றுநீர் போல் ஒழுகும் மத நீரையுடைய
பெரிய யானைகளும்; இவற்று  இரட்டி  ஏறுகோள் உறு  பதாதியும்-
இருபத்தாறு கோடி சிங்க ஏற்றைப் போன்ற காலாட்படையும்; சென்றன
- உடன் போயின.
 

(3)
 

9534.

'மூன்று வைப்பினும், அப் புறத்து உலகினும்,

முனையின்

ஏன்று கோளுறும் வீரர்கள் வம்மின்!' என்று

இசைக்கும்

ஆன்ற பேரியும், அதிர் குரல் சங்கமும், அசனி

ஈன்ற காளமும், ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப.

 

மூன்று வைப்பினும்- விண்ணுலகு, மண்ணுலகு, பாதலம் எனும்
மூன்றுலகத்திலும்;   அப்புறத்து    உலகினும்  -   அவற்றிற்கு
அப்பாற்பட்ட உலகத்திலும் உள்ளவர்களாய்; முனையின் ஏன்று
கோளுறும் வீரர்கள்
  -  போர்முனையில்   எதிர்த்துப்   போர்
புரியும் அரக்கவீரர்கள் யாவரும்; வம்மின் என்று   இசைக்கும்
- வாருங்கள் என   அழைப்பது  போன்று   ஒலிக்கும்; ஆன்ற
பேரியும்
- பெரிய