பக்கம் எண் :

 வேல் ஏற்ற படலம்201

முரசுகளும்; அதிர் குரல் சங்கமும்- கேட்டாரை அதிரச் செய்யும்
குரலை உடைய சங்குகளும்; அசனி ஈன்ற காளமும்- இடி ஒலி
உண்டாக்கும்   எக்காளமும் ஆகிய   இசைக்கருவிகளின்   ஒலி;
ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப- பதினான்கு உலகங்களிலும்
சென்று ஒலிப்பன ஆயின.
 

(4)
 

9535.

அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை, அவுணர்

வினைய வானவர் வெவ் வினைப் பயத்தினை, வீரர்

நினையும் நெஞ்சையும் சுடுவது ஓர் நெருப்பினை,

நிமிர்ந்து

கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினைக்

கண்டார்.

 

அனைய ஆகிய அரக்கர்க்கும்- அத்தன்மை கொண்டு வரும்
அரக்கர்களுக்கும்; அரக்கனை- அரக்கனாக இருப்பவனை; அவுணர்
வினைய
- அவுணர்களின் தீவினையுடைய; வானவர் வெவ்வினைப்
பயத்தினை
- தேவர்களின்   கொடிய   தீவினைப் பயனாகத் துன்பம்
செய்கின்றவனை; வீரர் நினையும் நெஞ்சையும்- தன்னை நினைக்கும்
போர் வீரர்களின் உள்ளத்தையும்; சுடுவது ஓர் நெருப்பினை- சுடுகின்ற
ஒப்பற்ற   தீப்போன்றவனை;  நிமிர்ந்து  கனையும்   எண்ணையும்-
எல்லையைக் கடந்து நிற்கும் அளவினையும்; கடப்பது ஓர் கடலினைக்
கண்டார்
- கடந்து நிற்கின்ற ஒப்பற்ற கடல் போன்ற நிறமும் ஆற்றலும்
உடைய இராவணனைக் கண்டனர்.
 

(5)
 

9536.

கண்டு, கைகளோடு அணி வகுத்து, உரும் உறழ

கற்கள்

கொண்டு, கூற்றமும் நடுக்குறத் தோள் புடை

கொட்டி,

அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற,

ஆர்த்தார்-

'மண்டு போரிடை மடிவதே நலம்' என மதித்தார்.

 

கண்டு   -  இராவணனைப்  பார்த்து;  மண்டு  போரிடை  -
நெருங்கிச் செய்யும்  போரிலே; மடிவதே நலம் என  மதித்தார்
- சாவதே நல்லது என மதித்தவராய்; கைகளோடு அணி வகுத்து-
போர்க்களத்தில் பக்கங்களோடு முன்பின் வரிசையாக நின்று;